states

img

தில்லி குண்டு வெடிப்பு கைது செய்யப்பட்ட 4 பேரை விடுவித்த என்ஐஏ

தில்லி குண்டு வெடிப்பு கைது செய்யப்பட்ட 4 பேரை விடுவித்த என்ஐஏ

மோடி அரசின் பாதுகாப்பு மற்றும் உள்துறை தோல் வியால் தில்லியில் நவ., 10ஆம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந் தது. இந்த குண்டு வெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தில்லி காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தொடர் விசாரணை மேற்கொ ண்டு வருகிறது. மேலும் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடை யதாக பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட 3 மருத்துவர்கள் உள்பட 4 பேரை என்ஐஏ திடீரென விடுவித்துள்ளது. முக்கிய குற்ற வாளி என கைது செய்யப்பட்ட மருத்து வர் உமருக்கும், பரீதாபாத்தின் அல்-பலா பல்கலைக்கழக மருத்துவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3 நாட்கள் தொடர் விசாரணைக்குப் பிறகு 4 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், தில்லி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமீர் ரஷீத் அலி என்பவரை என்ஐஏ முதன்மை  மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.