காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட்
தீவிரவாதத்தை கையாளுவது உள்ளிட்ட பல விஷயங்களை பற்றி பேசினார் பிரதமர். மிகவும் நன்றாகவே பேசினார். ஆனால் ஏன் இந்த திடீர் போர் நிறுத்தம் என எவருக்கும் புரியவில்லை. ஏன் இந்தியா திடீரென டிரம்ப் சொல்வதை கேட்கிறது? காஷ்மீர் பிரச்சனையில் உதவுவதாக டிரம்ப் சொல்வது ஆபத்தான விஷயம். இதையெல்லாம் பற்றி பிரதமர் வாய் திறக்கவே இல்லை.
திரைக்கலைஞர் சோனாக்சி சின்ஹா
வட இந்திய செய்தி சேனல்கள் எல்லாம் கோமாளிகள் ஆகிவிட்டன. ஆர்ப்பாட்டமான காட்சிகள், சத்தம், அலறுதல், கத்துவது என கொடுமையான விஷயங்களை செய்கிறார்கள். செய்தி கொடுப்பது மட்டும்தானே உங்களுக்கு வேலை. அதனால் போரை வைத்து பரபரப்பு தேடுவதை நிறுத்துங்கள். ஏற்கனவே மக்கள் பதற்றத்தில் இருக்கின்றனர்.
சமாஜ்வாதி எம்.பி., புஷ்பேந்திரா சரோஜ்
எந்த நாடும் போரை விரும்புவதில்லை. காரணம் போரில் எப்போதும் அப்பாவி மக்கள் தான் பலியாகிறார்கள். ஆனாலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒன்றிய அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த அறிவிப்பை எப்படி அறிவித்தார்?
தில்லி ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ்வாமி
யாருடனும் கலந்தாலோசிக்காமலும், தீர்மானகரமான நடவடிக்கை எடுக்காமலும் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டுள்ளது. அதுவும் அமெரிக்காவின் அறிவிப்பால் நிறுத்தப்பட்டுள்ளது. இது முழு நாட்டிற்கும் செய்யும் துரோகமாகும்.