போர் என்பது பாலிவுட் திரைப்படம் அல்ல!
இந்துத்துவா கும்பலுக்கு முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே சாட்டையடி
புதுதில்லி இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தை வைத்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், பஜ் ரங் தளம், விஸ்வ இந்து பரிஷத், ஏபிவிபி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் தங்களது மதவெறி அரசியலை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக பாஜக ஆளும் மாநி லங்களில் இந்துத்துவா கும்பல் பாகிஸ்தான் மற்றும் முஸ்லிம் மக்க ளுக்கு எதிராக மதவன்முறையை தூண்டும் வகையில் ஊர்வலம், வெறுப்புப் பிரச்சாரம் மேற் கொண்டு வருகின்றன. தெலுங்கானா மாநிலம் ஹைத ராபாத்தில் பாகிஸ்தான் நாட்டின் முக்கிய நகரமான “கராச்சி” பெய ரில் உணவகம் ஒன்று இருந்தது. இந்த உணவகத்தை பாஜக - ஆர்எஸ்எஸ் கும்பல் அடித்து நொறுக்கியது. அதே போல பஹல் காம் தாக்குதல் நடந்த நேரத்தில் பாஜக மாநிலங்களில் 2 முஸ்லிம் இளைஞர்கள் அடித்துக் கொல்லப் பட்டனர். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஜம்மு-காஷ்மீர் மாணவர்கள், வணிகர்களை “பாகிஸ்தான் நாட்டின் கைக்கூலி” என முத்திரை குத்தி அரசின் உதவி யுடன் இந்துத்துவா கும்பலால் வெளியேற்றப்பட்டனர். குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் போர் பதற் றத்தை பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரப் பொருளாக பாஜக பயன்படுத்தி வருகிறது. மேலும் போர் பதற்றத்தை திறம்பட கை யாண்ட இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினரை குறிவைத்து,”நீங்கள் எப்படி பாகிஸ்தானுக்கு எதிரான போரை நிறுத்தலாம்” என சமூக வலைத் தளங்களில் ஆபாச அவதூறு பரப்பி விஷம பிரச்சாரத்தை மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்துத்துவா கும்பலின் இந்த அடாவடியை இந் திய முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே மறைமுகமாக கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,”போர் என்பது பாலிவுட் (இந்தி திரையுலகம்) திரைப்படம் அல்ல. அதே போல கொண்டாடப்பட வேண்டிய விஷ யமும் அல்ல. போர் எவ்வளவு மோசமானது, ஒரு நாட்டிற்கு எவ்வ ளவு இழப்பை ஏற்படுத்தும் என எனக்கு நன்றாகத் தெரியும். போரால் எண்ணற்ற உயிர்ச் சேதங்கள் ஏற்படும். குழந்தைகள் பெற்றோர் களை இழப்பர். குடும்பங்கள் உணர்வு ரீதியான அதிர்ச்சிகளை பல தலைமுறைகளுக்கு சுமப்பர். ஒரு ராணுவ வீரராக எனக்கு உத்த ரவிடப்பட்டால் போரை முன்னெ டுப்பேன். ஆனால், அது என் முதல் தேர்வாக இருக்காது, முதல் நட வடிக்கை எப்போதும் பேச்சு வார்த்தைதான்” எனக் கூறி இந் துத்துவா கும்பல்களுக்கு மறை முகமாக சாட்டையடி பதில் கொடுத் துள்ளார். எம்.எம்.நரவனேயின் பேச்சு பாஜகவிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அவ ரது பேச்சு சமூக வலைத்தளங்க ளில் வேகமாக வைரலாகியும் வரு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.