உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை எஸ்ஐஆரை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.
கேரள மாநிலத்தில் வருகின்ற டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய இரண்டு தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 13ஆம் தேதி நடைபெறும். எனவெ உள்ளாட்சி (LSGI) தேர்தல்கள் முடியும் வரை SIR பணிகளை நிறுத்த வேண்டும் என அரசு கோரியுள்ளது.
இந்தத் தேர்தல்களுக்கு 1.76 லட்சம் அரசுப் பணியாளர்களும், 68,000 பாதுகாப்புப் பணியாளர்களும் தேவைப்படுகின்றனர். இதற்குமேல் SIR பணிக்கே தனியாக 25,668 பேர் தேவைப்படுகின்றனர்.
தேர்தல் பணிகளோடு சேர்த்து SIR பணிகளையும் ஒரே நேரத்தில் பார்ப்பதால், மாநில நிர்வாகத்தில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டு, வழக்கமான நிர்வாக பணிகள் தடைபடும் நிலை உருவாகிறது என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
