மாற்றுப் பாலினத்தவருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் சம வாய்ப்பு வழங்குவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் ஆசிரியராக விண்ணப்பித்தவருக்கு மாற்றுப் பாலினத்தவர் என்ற காரணத்தைக் காட்டி பணி வழங்க மறுத்ததற்கு எதிராகப் பாதிக்கப்பட்ட திருநங்கை உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவருக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட்டதுடன் ஓய்வுபெற்ற நீதிபதி ஆஷா மேனன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்தக்குழு, திருநங்கைகள் மற்றும் பாலின மாற்றுப்பாலினத்தவர்களுக்குச் சம வாய்ப்புகள், உடனிணைந்த மருத்துவ சேவைகள், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை பரிசீலிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.