டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை (ED) விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறை விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் சார்பில் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணை நடைபெறும் போது, “உங்களுக்கு வெறும் சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்திற்குள் வேண்டுமானாலும் நுழைந்து சோதனை செய்து ஆவணங்களை எடுத்துச் செல்ல முடியுமா? இது சரியா?” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரியாக அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், “மாநில அரசின் விசாரணைக்குள் மத்திய அமைப்பு தலையிடுவது கூட்டாட்சிக்கு எதிரானது அல்லவா?” என தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு கருத்து தெரிவித்தது.
விசாரணை முடிவில், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
