நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று காலை 11.30க்கு மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தொடங்கியது. ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, சிபிஎம், சிபிஐ, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி-க்கள் கலந்துகொண்டனர்.
இதில் பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.