india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

புதுதில்லி, நவ. 5 - நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25  அன்று துவங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடை பெறும் என ஒன்றிய நாடா ளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

“இந்திய அரசின் பரிந்துரையின் பேரில், 2024ஆம் ஆண்டின் குளிர் காலக் கூட்டத் தொடருக் காக நவம்பர் 25 முதல்  டிசம் பர் 20 வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கான முன்மொ ழிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் ஒருபகுதியாக இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-ஆவது ஆண்டு விழா, சம்விதன் சதன் மைய மண்டபத்தில் ‘நவம்பர் 26’ (அரசியலமைப்பு தினம்) அன்று கொண்டாடப்படும்” என்று கிரண் ரிஜிஜூ தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் குறிப் பிட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மற்றும் மகா ராஷ்டிர மாநில சட்டப்பேர வைத் தேர்தல் முடிவுகள் நவம்பர் 23 அன்று வெளியாக வுள்ள நிலையில், அதன் பின்னர், நவம்பர் 25 முதல் குளிர்காலக் கூட்டத் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரின் போது, ​​தற்போது நாடாளு மன்ற கூட்டுக்குழு விசார ணையில் உள்ள ‘வக்பு சட்டத் திருத்த மசோதா’வை நிறைவேற்ற ஒன்றிய அரசு முயற்சி மேற்கொள்ளும்; அத்துடன், ​‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவையும் அது அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

“நாங்கள் இப்போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நோக்கிச் செயல்படுகி றோம். மேலும், இந்தியா  ஒரு நாடு, ஒரே சிவில்சட்டத்தை நோக்கி நகர்கிறது”  என்று பிரதமர்  நரேந்திர மோடி  அண்மையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நவ. 7 முதல் தமிழகத்தில் 4 நாள் மஞ்சள் எச்சரிக்கை

சென்னை, நவ. 5 - தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதி களின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நில வுகிறது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங் களுக்கு நவம்பர் 7 முதல் 10-ஆம் தேதி வரை 4 நாட் களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, செங்கல் பட்டு, விழுப்புரம், கடலூர்,  மயிலாடுதுறை, நாகப்பட்டி னம், திருவாரூர், தஞ்சாவூர்,  புதுக்கோட்டை, இராமநாத புரம் ஆகிய 9 மாவட்டங் களில் 6.5 செ.மீ. முதல் 12 செ.மீ. வரை மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப் பட்டுள்ளது.

மேலும், தெற்கு வங்கக் கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 6,7,8 ஆகிய தேதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை யிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என வானி லை மையம் எச்சரித்துள்ளது.