india

img

தேசிய கீதத்திற்கு முன்பு ’வந்தே மாதரம்’ கட்டாயம்! - ஒன்றிய அரசு

அரசு விழாக்கள் மற்றும் பள்ளிகளில் இனி தேசிய கீதத்திற்கு முன்னதாக 'வந்தே மாதரம்' பாடலை கட்டாயம் பாட வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம், ஜனவரி 28-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில், அரசு விழாக்கள் மற்றும் பள்ளிகளில் இனி தேசிய கீதத்திற்கு முன்னதாக 'வந்தே மாதரம்' பாடலின் 6 சரணங்களும் கட்டாயம் பாட வேண்டும். தேசியக் கொடி ஏற்றும்போதும், ஆளுநர் உரை மற்றும் ஜனாதிபதி உரையின்போது இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க மரியாதை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 1937 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ், மதச்சார்பற்ற ஒற்றுமையை பேணும் நோக்கில், வந்தே மாதரம் பாடலில் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே தேசியப் பாடலாக ஏற்றுக்கொண்டது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இப்பாடலில் பின்னர் வரும் 4 சரணங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தில் கடவுள்களை புகழ்ந்து பாடியிருந்தது, இது அனைத்து சமூகங்களுக்கும் ஏற்றதாக இருக்காது என்ற கருத்து நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.