சக்கர வியூகத்தில் சிக்கிய பாரத மாதா: சரணாகதி பட்ஜெட்டும், வஞ்சிக்கப்படும் 90% இந்தியர்களும்!
நாடாளுமன்றத்தில் நான் பட்ஜெட் குறித்துப் பேசும்போது, முதலில் ஓர் அடிப்படை உரிமையைக் கோருகி றேன். இந்த அவையில் எனக்குப் பேச முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். ஏனெனில், நான் சொல்லப்போகும் உண்மைகள் வெறும் எண்கள் அல்ல; அவை இந்தத் தேசத்தின் 150 கோடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றியது, நமது பாரத மாதாவின் இறையாண்மையைப் பற்றியது. அல்வா விழாவும், அதிகாரமற்ற 90% இந்தியர்களும் நான் ஒரு புகைப்படத்தைக் காண்பிக்கி றேன். அதைக் கண்டே ஆளுங்கட்சியினர் அஞ்சி நடுங்குகிறீர்கள். அந்தப் படத்தில் என்ன இருக்கிறது? பட்ஜெட் தயாரான பிறகு கொண்டாடப்படும் ‘அல்வா’ வழங்கும் விழா. அந்த அல்வா கிண்டப்படும் சட்டியைச் சுற்றி நிற்கும் 20 அதிகாரிகளில் ஒரு தலித் இருக்கி றாரா? ஒரு பழங்குடியினர் இருக்கிறாரா? ஒரு பிற்படுத்தப்பட்ட (OBC) அதிகாரி இருக்கிறாரா? 90 சதவீத இந்தியர்களுக்கு இந்த பட்ஜெட் அல்வாவில் துளி கூடப் பங்கு இல்லை. இதற்காகத்தான் நாங்கள் ‘சாதி வாரி கணக்கெ டுப்பு’ (Caste Census) வேண்டும் என்கிறோம். இந்தத் தேசத்தின் அதிகாரப் பங்கீட்டில் தங்கள் பங்கு எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ள 95 சதவீத இந்தியர்கள் விரும்புகிறார்கள். ஆனால், நான் இதைச் சொல்லும்போது நிதிய மைச்சர் சிரிக்கிறார். மேடம், இது சிரிப்ப தற்கான விஷயம் அல்ல, இது கோடிக்க ணக்கான மக்களின் கண்ணீர். நவீன சக்கர வியூகம்: பத்ம வியூகத்தின் ஆறு பேர் மகாபாரதத்தில் அபிமன்யுவை ஒரு ‘சக்கர வியூகத்திற்குள்’ வைத்து ஆறு பேர் கொன்றார்கள். அதேபோலத்தான், இன்றைய இந்தியாவையும் ஒரு நவீன ‘சக்கர வியூகம்’ சூழ்ந்திருக்கிறது. இந்த பட்ஜெட்டும் அந்த வியூகத்தின் ஒரு பகுதிதான். இந்த தாமரை வடிவ (பத்ம) வியூகத்தின் பின்னணியிலும் ஒரு ஆறு பேர் இருக்கிறார்கள். இவர்கள் நாட்டைச் சிறைபிடித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், இந்த வியூகத்தை அமைப்ப வர்கள் ஒரு விஷயத்தைத் தவறாகக் கணக்கிட்டு விட்டார்கள். இந்திய இளைஞர்களையும், விவ சாயிகளையும், பிற்படுத்தப்பட்ட மக்களையும் அவர்கள் ‘அபிமன்யு’ என்று நினைக்கிறார்கள். ஆனால், இந்திய மக்கள் அபிமன்யுக்கள் அல்ல; அவர்கள் ‘அர்ஜுனர்கள்’. உங்கள் சக்கர வியூகத்தைத் தகர்த்து எறிவார்கள். வெறுப்பும், வன்முறையும், சக்கர வியூகமும் இந்தியாவின் அடையாளம் அல்ல. இந்து தர்மத்தில் சக்கர வியூகத்திற்கு நேர் எதிரானது எது? அதுதான் ‘சிவபெருமானின் திருமணம்’. சிவனின் திருமண ஊர்வலத்தில் யார் வேண்டுமானாலும் வரலாம், எந்த மதத்த வர் வேண்டுமானாலும் ஆடலாம், பாடலாம். அங்கு யாருக்கும் தடை இல்லை. உங்கள் சக்கர வியூகத்தில் மட்டும் அந்த ஆறு பேரைத் தவிர வேறு யாரும் நுழைய முடியாது. இந்தப் போர் ‘சக்கர வியூகத்திற் கும்’ ‘சிவனின் விழாவுக்கும்’ இடையிலான போர். நாங்கள் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் (MGNREGA), அரசியல் சாசனம் போன்ற ஆயுதங்களால் உங்கள் சக்கர வியூகங்களை உடைப்போம். உலகப் போர்ச் சூழலும், மோடியின் சரணாகதியும் இன்று உலகம் ஒரு ஆபத்தான கால கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் மேலாதிக்கத்தைச் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் எதிர்க்கின்றன. “போர் சகாப்தம் முடிந்துவிட்டது” என்று பிரதமர் மோடி கூறுவது முற்றிலும் தவறானது. எரிசக்தி மற்றும் நிதி ஆகியவை இன்று ஆயுதமாக்கப் பட்டு வருகின்றன. டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து வருகிறது. ஆனால், இந்தியாவைப் பாதுகாக்க வேண்டிய பிரதமர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை கையாள்வதில் மோசமாகத் தோல்வி யடைந்துள்ளார். அமெரிக்கா தன்னை ஒரு சர்வா திகாரியாகக் காட்டிக்கொள்ள இந்தியாவை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது. நான் மிக வருத்தத்தோடு சொல்கிறேன், “நீங்கள் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்.” இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: ஒரு முழுமையான சரணாகதி இந்த ஒப்பந்தம் என்பது ஒரு சாதாரண வணிக ஒப்பந்தம் அல்ல; இது ஒரு ‘முழுமை யான சரணாகதி’. எரிசக்தி துறையில் இந்தியா வின் பாதுகாப்பு இந்த ஒப்பந்தத்தால் பறி போய்விட்டது. கடந்த ஆண்டுகளில் இந்தியா மீதான அமெரிக்காவின் வரி 3 சதவீதமாகவே இருந்தது; தற்போது இது 18 சதவீதமாக உயர்ந் துள்ளது. இது நம் நாட்டு விவசாயிகளின் நலன் களை நசுக்கும். இயந்திரமயமாக்கப்பட்ட அமெரிக்காவின் பிரம்மாண்டமான விவசாயத்துறை, இந்திய விவசாயிகளை அழிக்கப் போகிறது. ஜவு ளித்துறையை வங்கதேசத்திற்கு கிடைத்துள்ள வாய்ப்புகள் அழிக்கப் போகின்றன. ஏன் இந்த சரணாகதி? அதானியின் வழக்கைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடியின் கழுத்தை அமெரிக்கா நெரித்துவிட்டது. தன் மீதும் தன் நண்பர்கள் மீதும் இருக்கும் பிடியைத் தளர்த்திக்கொள்ள, 150 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தையே பிரதமர் அடகு வைத்துவிட்டார். தரவுகள் : இந்தியாவின் புதிய சொத்து தாரை வார்ப்பு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில் நுட்பத்திற்கு அடிப்படையாக விளங்கும் இந்தி யர்களின் தரவுகளை (Data), இந்த ஒப்பந்தம் மூலம் மோடி அரசு அமெரிக்காவிற்குத் தாரை வார்க்கிறது. இந்தியர்களின் தரவுகள் இலவச மாக அமெரிக்காவுக்குச் செல்வதற்கு நீங்கள் வழி உருவாக்கிக் கொடுத்துள்ளீர்கள். இது தேசப் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல். முடிவாக நான் சொல்வது இதுதான்: இந்திய மக்கள் விழித்துக்கொண்டுவிட்டார்கள். 90 சதவீத மக்களுக்கான உண்மையான அதி காரப் பங்கீடு கிடைக்கும் வரை, சாதி வாரி கணக்கெடுப்பு நடக்கும் வரை, உங்கள் சக்கர வியூகங்களை நாங்கள் ஓயாமல் தகர்ப்போம். பாரத மாதாவை மீட்டெடுப்போம்! ( மக்களவையில் பிப்ரவரி 10 இரவு பட்ஜெட் விவாதத்தை துவக்கி வைத்து ஆற்றிய உரையின் பகுதிகள்)
