tamilnadu

img

பல மாதங்கள் ஊதியம் தரவில்லை : பட்டினிக்கு தொழிலாளி பலி!

பல மாதங்கள் ஊதியம் தரவில்லை : பட்டினிக்கு தொழிலாளி பலி!

கொல்கத்தா மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கர்கண்டா தேயிலைத் தோட்டத் தொழி லாளர்களுக்கு பல மாதங்கள் ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் மிக மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு பலி யாகி வருகின்றனர்.  கடந்த 2025  ஜூன் 29, அன்று, 51 வயதான குஞ்சன் நாயக் என்ற தேயிலைத் தோட்டத் தொ ழிலாளி  உயிரிழந்தார். அவரது இறப்பு சான்றித ழில் மரணத்திற்கான காரணம் பதிவு செய்யப்பட வில்லை. இந்நிலையில் தான் அவரது மனைவி மரணத்திற்கான காரணம் பற்றி பேசியுள்ளார்.  உப்பும் சோறும்... கடந்த சில மாதங்களாக, குஞ்சன் நாயக்கின் குடும்பம் அரசு  வழங்கி வருகிற 15 கிலோ அரிசி மற்றும் 20 கிலோ கோதுமையை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தது. கைவசம் பணம் இல்லாததால், காய்கறிகள் வாங்குவதற்காக அவர்கள் தங்க ளுக்குக் கிடைத்த தானியங்களை வெளிச்சந்தை யில் விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். நிலைமை மோசமானபோது, ஒருவேளை உணவு மட்டுமே, அதுவும் வெறும் சோறும் உப்பும்  உண்ண  வேண்டிய  நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். குஞ்சன் நாயக்கின் உடல்நிலை சரியில்லாமல் போன போதுகூட  மருத்துவரைப் பார்க்கவோ, மருந்து வாங்கவோ அவர்களிடம் பணம் இல்லை. அவர் மெல்ல மெல்ல கொடுமையான முறையில் பட்டினி கிடந்து பலியானதாக கூறியுள்ளார். மேலும்  குஞ்சன் நாயக் மரணம் அடைவதற்கு முன்பு கூட நான்கு மாதங்களாக ஊதியம் வழங் கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குஞ்சன் நாயக்கின் மரணத்தைத் தொடர்ந்து, ‘உணவு மற்றும் வேலைக்கான உரிமை இயக்கம்’ (RTFWC) மற்றும் ‘பச்சிம் பங்கா சா மஜூர் சமிதி’ (PBCMS) ஆகிய அமைப்புகள் நடத்திய ஆய்வில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. ஆய்வு செய்யப்பட்ட 108 தொழிலாளர்களில் 38 சத விகிதமானவர்கள்  ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 சதவிகித தொழிலார்கள்  மிகவும் மோசமாக உடல் மெலிவுற்ற நிலையில் உள்ளனர். இப்பகுதி பட்டினிக்கொடுமையால்  பாதிக்கப்பட்டுள்ள தளமாக உள்ளது என மருத்து வர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும்  நாள்பட்ட பசியே இந்த சுகாதார நெருக்கடிக்கு முக்கியக் காரணம்.  இளைஞர் கள் கூட உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு பக்கவாதம் (Stroke) ஏற்பட்டு உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது” எனவும் குறிப்பிட்டுள்ளனர். 70 சதவீத லாபமிருந்தும்  ஊதியம் வழங்கவில்லை கர்கண்டா தேயிலைத் தோட்டத்தை 2018 முதல் ‘மெரிகோ அக்ரோ இண்டஸ்ட்ரீஸ்’ (Merico Agro Industries) என்ற நிறுவனம் நிர்வகித்து வரு கிறது. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி தொழி லாளர்களின் ஊதியத்தை இந்நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.  உண்மையில் 2024 மார்ச் மாதத்தில் அந்த நிறுவனத்தின் வருவாய்  112.4 கோடி ரூபாயாக  உயர்ந்துள்ளது. 2023 ஆம் ஆண்டை  விட 12 சதவிகிதம்  அதிகமாகும். மேலும் அந்நிறுவனத்தின் நிகர லாபம் மட்டுமே 70 சதவிகிதமாக  உயர்ந்து 1.9 கோடி ரூபாயை எட்டியுள்ளது. லாபம் ஈட்டியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காதது மட்டுமன்றி, 2023 முதல் தொழிலா ளர்களின் பி.எஃப் (PF) தொகையையும் நிர்வாகம் முறையாகச் செலுத்தவில்லை. நிர்வாகம் தொழி லாளர்களின் பி.எஃப் பணத்தைத் திருடுகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.