states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தெலுங்கானா உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 13அன்று  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தெலுங்கானா வில் 116 நகராட்சிகள், 7 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. 116 நகராட்சிகளில் உள்ள 2,569 வார்டுகள், 7 மாநகராட்சிகளில் உள்ள 412 வார்டுகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்டது.

முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவரின் சம்மதம் இன்றி விவாகரத்து பெறும் ‘குலா’ (Khula) முறை குறித்து, ஏப்ரல் 22 அன்று உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்துகிறது . குலா முறையில் விவாகரத்து பெற நீதிமன்ற அனுமதி அவசியமா மற்றும்அதன் பிறகு ஜீவனாம்சம் கோர முடியுமா போன்ற முக்கிய கேள்வி கள் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.  

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை காகிதம் இல்லா முறைக்கு மாறுகிறது. இதற்காக சட்டப்பேரவை வளாகத்தில் அமைக்கப்பட்ட நேவா (National e-Vidhan Application - NeVA) சேவை மையத்தை முதல்வர் ஹேமந்த் சோரன் பிப்.11 புதனன்று திறந்து வைத்தார். படிப்படியாக அவையின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளும் காகிதமில்லா முறையாக மாற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனேவின் இன்னும் வெளியிடப்படாத சுயசரிதை புத்தகம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு, பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா (Penguin Random House India) பதிப்பகத்திற்கு தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு நோட்டீஸ் அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளது.