states

img

இந்தியா முழுவதும் 39 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் பாஜக ஆளும்  ஒடிசாவில் மட்டும் 27 சதவிகிதம் பறிமுதல்

இந்தியா முழுவதும் 39 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் பாஜக ஆளும்  ஒடிசாவில் மட்டும் 27 சதவிகிதம் பறிமுதல்

இந்தியாவில் கடந்த 2020 முதல் நாடு  முழுவதும் சுமார் 39 லட்சம் கிலோ  கஞ்சா மற்றும்அது சார்ந்த போதைப்பொருட்கள் பறிமுதல் செய் யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.  நாடு முழுவதும் போதைப் பொருட் கள் அதிகரித்துள்ளது. வேலையின்மை யால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடக் கூடிய நிகழ்வுகள் அதிகரிப்பதற்கு போதைப் பொருட்கள் மிக முக்கிய மான காரணமாக உள்ள நிலையில், இந்தியாவில் இவ்வளவு அதிகளவி லான போதைப் பொருள் கைப்பற்றப் பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது.  மக்களவையில் கடந்த வாரம் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அளித்த எழுத்துப்பூர்வ பதிலின்படி, 2020 முதல் 2025 நவம்பர் வரையிலான காலகட்டத் தில் மொத்தம் 38.89 லட்சம் கிலோ கஞ்சா சார்ந்த போதைப்பொருட்கள் (கஞ்சா, ஹஷிஷ் மற்றும் ஹஷிஷ் ஆயில்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தில் தான் பறி முதல் செய்யப்பட்ட மொத்த அளவில் சுமார்  27 சதவீதத்திற்கும் அதிகமான  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு முதலி டத்தில் உள்ளது. அதிக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட மாநிலமாக  ஒடிசா உள்ளது. அங்கு கடந்த ஆறு ஆண்டுகளில் மொத்தம் 10.65 லட்சம் அதாவது பறிமுதல் செய்யப்பட்டதில் 27 சதவிகித கஞ்சா  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  அதற்கு அடுத்தபடியாக  5.5 லட்சம் கிலோவுடன் ஆந்திராவும் , மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான், மேற்கு வங்கம்  உள்ளன. ராஜஸ்தானில் கஞ்சா கடத்தல் பெருமளவு அதிகரித்துள்ளது. 2020 இல் 14,826 கிலோபறிமுதல் செய்யப்பட்ட நிலையில்  2025 இல் 58,146 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.