காங்கிரஸ் எம்.பி.,கே.சி.வேணுகோபால்
நரவனேவின் புத்தகம் குறித்து பாஜகவினர் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இதற்கெல்லாம் அவர்கள் ஏன் அஞ்சுகிறார்கள்? நாங்கள் பயப்படவில்லை. அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ, அதைச் செய்யட்டும். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நாங்கள் சொன்னது மிகவும் தெளிவானது மற்றும் முற்றிலும் உண்மையானது.
சமாஜ்வாதிகட்சித் தலைவர் அகிலேஷ்
எப்போதெல்லாம் பாஜக பலவீனமடைகிறதோ, ஆட்சியை இழந்துவிடுவோம் என்ற பயம் வருகிறதோ அப்போதெல்லாம் வகுப்புவாதத்தைக் கையில் எடுக்கிறார்கள். பயம் அதிகரிக்க அதிகரிக்க, அவர்களின் வகுப்புவாதப் போக்கும் அதிகரிக்கிறது.
பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்
ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்காவிற்கு இந்தியா ஏதேனும் முறையான வாக்குறுதி அளித்துள்ளதா என்பது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் மிஸ்ரி திட்டவட்டமான பதில் எதையும் அளிக்கவில்லை. டிரம்ப் கூறியதை மறுக்காமல் இருப்பது மோடி அரசாங்கம் வாக்குறுதி கொடுத்துள்ளது என உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.
சிபிஎம் மாநிலங்களவை எம்.பி.,ஜான் பிரிட்டாஸ்
இந்திய வங்கித் துறையில் அந்நிய நேரடி முதலீடு (FDI) கடந்த இரண்டே ஆண்டுகளில் அதிர்ச்சியளிக்கும் வகையில் 87% ஆக சரிந்துள்ளது. 2022-23 நிதியாண் டில் 897.76 மில்லியன் டாலராக இருந்த முதலீடு, 2024-25 நிதியாண்டில் வெறும் 115.47 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
