இவரெல்லாம் முதல்வரா?'
பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர் கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்மம் கக்குவதில் ஒருவரோடொருவர் போட்டியிடு கின்றனர். உ.பி., மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் புல்டோசர் கொண்டு சிறுபான்மை இஸ்லா மிய மக்களின் குடியிருப்புகளை இடித்து தள்ளி யது மட்டுமல்ல, தன்னுடைய தேர்தல் பிரச்சார வாகனத்தையே புல்டோசர் போல வடி வமைத்திருந்தார்.
அசாம் மாநில பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா வங்க மொழி பேசும் இஸ்லாமியர்கள் அசாமில் வாக்களிக்கக்கூடாது; அவர்களை அச்சுறுத்துவது தான் என் வேலை என்று கூறி யதோடு மட்டுமல்ல. வங்கமொழி பேசும் ரிக்சா காரர்கள் 5ரூபாய் கேட்டால் 4 ரூபாய் கொடுங் கள். அவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால்தான் அசாமை விட்டு வெளியேறுவார்கள் என்றெல் லாம் பேசியிருந்தார். பாஜக தலைமையோ, பிரத மர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றவர்களோ அவரை கண்டிக்கவில்லை.
இந்த நிலையில், அசாம் மாநில முதல்வர் ஹிமந்தாபிஸ்வ சர்மா காணொலி ஒன்றை வெளி யிட்டுள்ளார். அசாம் மாநில பாஜக சமூக ஊடகத்தில் இது வெளியிடப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களை நோக்கி அவர் துப்பாக்கி யால் குறி வைத்தது போலவும், குல்லா மற்றும் தாடி வைத்த இருவரை அவர் சுடுவது போலவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தன.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலை யில் அந்த காணொலி நீக்கப்பட்டது. ஆனால் அவர் மீது அளிக்கப்பட்ட புகாரை ஏற்றுக் கொள்ள காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் நேரடியாக தலையிட்டு விசார ணைக்குழுவை அமைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன் றம் விசாரணைக்கு ஏற்று பட்டியலிட்டுள்ளது.
பாஜக தேசிய தலைமை அசாம் மாநில முதல்வரை கண்டிக்க முன்வரவில்லை. ஒன்றிய அரசு தரப்பிலும், எந்த விளக்கமும் கூறப்பட வில்லை. மணிப்பூரில் இரட்டை என்ஜின் ஆட்சி யால் உருவாக்கப்பட்ட இனப் பகைமையால் அந்த மாநிலம் இப்போது வரை தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. அசாமிலும் இத்தகைய நிலைமையை ஏற்படுத்த முயல்கின்றனர்.
மக்களை பிளவுபடுத்தி அதிகாரத்தை கைப்பற்றி தங்களது நாசகரத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுதான் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் செயல்திட்டம். அந்தப் பணி யைத்தான் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் செய்து வருகிறார்கள். பிரதமர், ஒன்றிய உள்துறை அமைச்சர்களும் இத்தகைய பணியில் ஈடுபடும் நிலையில் அசாம் மாநில முதல்வர் தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் வலுவாக தலையிட வேண்டும்.
