தடைகளை நீக்கினால் யுரேனியம் செறிவூட்டலைக் குறைப்போம்: ஈரான் அறிவிப்பு
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேசப் பொருளாதாரத் தடை கள் முழுமையாக நீக்கப்பட்டால், அந்நாடு சேமித்து வைத்துள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவைக் குறை க்கத் தயார் என ஈரானின் அணுசக்தித் துறைத் தலைவர் முகமது எஸ்லாமி தெரிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயல்வதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரானின் அணு சக்தித் திட்டங்களுக்கு முழுமையாகத் தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.