articles

img

இன்று பொது வேலை நிறுத்தம் போர்க்களத்தில் 25 கோடி உழைப்பாளி மக்கள்!

இன்று பொது வேலை நிறுத்தம்  போர்க்களத்தில் 25 கோடி உழைப்பாளி மக்கள்!

சிஐடியு பொதுச் செயலாளர் எளமரம் கரீம் அவர்களின் சிறப்பு நேர்காணல்

இந்திய உழைக்கும் வர்க்கம் தனது உரிமைகளைப் பாதுகாக்க மீண்டும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டக் களத்தில் நிற்கிறது. ஒன்றிய அரசின் கார்ப்பரேட் சார்பு கொள்கைகள், தொழிலாளர் சட்டப் பறிப்பு மற்றும் பொதுத்துறை விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக பிப்ரவரி 12 - இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம். இந்த போராட்டத்தின் பின்னணி, அவசியம் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் எளமரம் கரீம் அவர்கள் வழங்கிய விரிவான நேர்காணல்.

கேள்வி: பிப்ரவரி 12 பொது  வேலை நிறுத்தத்திற்கான அறைகூவலை விடுத்துள்ளவர்கள் யார்? பதில்: சிஐடியு உள்ளிட்ட 10 மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டு மேடை இந்த அறைகூவலை விடுத்துள்ளது. இதற்கு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பும் (SKM) முழு ஆதரவு அளித்துள்ளது. இந்தப் போராட்டத்தின் மிக முக்கியமான ‘பெரிய கோரிக்கை’ எது? ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை (Labor Codes) முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதே மிகப்பெரிய கோரிக்கை. இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டபோது நாடாளுமன்றத்தில் இருந்த சூழல் குறித்து நீங்கள் கூறுவது என்ன? மாநிலங்களவையில் 12 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், ஜனநாயக விரோத முறையில் அரசு இந்த சட்டத் தொகுப்பு களை நிறைவேற்றியது.

ஜனாதிபதி ஒப்புதல் பெற்றும்  இந்த சட்டங்களை அரசால் அமலாக்க முடியாதது ஏன்? 1991 முதல் தொழிலாளர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களும், விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டமுமே அரசை இத்தனை காலம் தடுத்து நிறுத்தி வைத்திருந்தது. பொருளாதார ஆய்வு அறிக்கை (2025-26) சொல்லும் ‘வளர்ச்சி’ பற்றி உங்கள் கருத்து என்ன? அது ஒரு மாயை. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, குறைந்த ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பற்ற நிலை ஆகிய எதார்த்தங்களை அந்த அறிக்கை மூடி மறைக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தொழிற்சங்கங்கள் பற்றி கூறிய கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? அது மிகவும் அநீதியானது. தொழிற்சங்கங்கள் தொழில் வளர்ச்சியைத் தடுத்ததாக நீதிபதி கூறுவது ஆதாரமற்றது.

கார்ப்பரேட் நலனுக்காகத் தொழிலா ளர்களை நிராயுதபாணியாக்கும் அரசின் உத்தியை யே நீதிபதியின் கருத்தும் பிரதிபலிக்கிறது. பணி இடப் பாதுகாப்பு இந்தியாவில் எப்படி உள்ளது? மிகவும் மோசமாக உள்ளது. சமீபத்தில் கொல் கத்தா கிடங்கில் 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் இதற்குச் சாட்சி. புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அமலானால் இந்த நிலை இன்னும் மோசமாகும். இந்திய - ஐரோப்பிய யூனியன் வணிக ஒப்பந்தத்தினால் ஏற்படும் பாதிப்பு என்ன? இது ஒரு தலைப்பட்சமான ஒப்பந்தம். ஐரோப்பா வின் ஆடம்பரப் பொருட்களை இங்கே இறக்குமதி செய்யவும், இந்தியாவை வெறும் ‘அசெம்பிளிங்’ மையமாக மாற்றவுமே இது வழிவகுக்கும்.

விவசாயிகளின் என்னென்ன கோரிக்கைகளைத் தொழிற்சங்கங்கள் கையிலெடுத்துள்ளன? விளைபொருட்களுக்கு நியாயமான குறைந்த பட்ச ஆதார விலை (MSP), சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை அமலாக்கம் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி ஆகியவற்றைத் தொழிற்சங்க மேடைக ளில் இருந்தும் முழங்குகிறோம். 1991-க்குப் பிறகு நடந்துள்ள  23-ஆவது வேலை நிறுத்தம் இது.  இதுவரை என்ன சாதிக்கப்பட்டது? இன்று ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவ னங்கள் எஞ்சி இருப்பதற்கும், தொழிலாளர் உரிமை கள் 2025 வரை பறிபோகாமல் இருந்ததற்கும் கடந்த 22 பொது வேலை நிறுத்தங்களே காரணம். கர்நாடக காங்கிரஸ் அரசின் நடவடிக்கை பற்றி நீங்கள் முன்வைக்கும் விமர்சனம் என்ன? 2026 ஜனவரியில் தொழிலாளர் சட்டத் தொகுப்புக ளுக்கான விதிகளை கர்நாடக அரசு நிறைவேற்றி யுள்ளது.

இது பாஜக அரசை விட ஒருபடி மேலே போய் செய்யப்பட்ட தொழிலாளர் துரோகம். உடனே வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். கேரள இடதுசாரி அரசு இந்த விஷயத்தில் என்ன முன்மாதிரியை உருவாக்கியுள்ளது? கேரள முதல்வர், “எங்கள் மாநிலத்தில் இந்த சட்டத் தொகுப்புகளை அமல்படுத்த மாட்டோம்” என வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆய்வுக் குழுவையும் அமைத்துள்ளார். கிக் (Gig) தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதில் உள்ள சவால்கள் என்ன? அவர்கள் டிஜிட்டல் செயலி தளத்தில் வேலை செய்பவர்கள். எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு நீக்கப்படலாம் என்ற அச்சுறுத் தல் அவர்களுக்கு உள்ளது. இருந்தாலும் கேரளாவில் சொமாட்டோ, பிளிப்கார்ட் ஊழியர்களைத் திரட்டி வெற்றிகரமாகச் சங்கம் அமைத்துள்ளோம்.

ஒன்றிய பட்ஜெட்டில் தொழிலாளர்களுக்கான நிதி ஒதுக்கீடு எப்படி உள்ளது? பட்ஜெட்டில் தொழிலாளர் என்ற சொல்லே இல்லை. தொழிலாளர்களுக்கோ, விவசாயிகளுக் கோ எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை; அனைத்துப்  பலன்களும் கார்ப்பரேட்டுகளுக்கே போய்ச் சேர்ந்துள்ளன. மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) நிலை என்ன? இத்திட்டம் தற்போது சீர்குலைக்கப்பட்டுள்ளது. ராமர் பெயரிலான புதிய திட்டங்கள் மூலம் தொழிலா ளர்களின் பழைய உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மின்சாரத் துறை ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஏன் இணைகிறார்கள்? மின்சாரத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்பது அவர்களின் முக்கியக் கோரிக்கை. அவர்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது. ஊடகத் தொழிலாளர்களின் பாதிப்பு குறித்து நீங்கள் கூறுவது என்ன? பத்திரிகையாளர்களுக்கான ஊதிய வாரியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் ‘மத்திமம்’ மற்றும் ‘மங்களம்’ ஊடக ஊழியர்கள் ஆட்குறைப்புக்கு எதிராகப் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 12 வேலை நிறுத்தத்தில் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது? கடந்த முறையை விட அதிகமாக, சுமார் 25 கோ டிக்கும் அதிகமான உழைக்கும் மக்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

போராட்டத்தின் களச் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? நாடு முழுவதும் சுமார் 2000 மையங்களில் தொழி லாளர்கள் அணிதிரள்வார்கள். சாலை மறியல் உள்ளிட்ட தீவிரமான கிளர்ச்சிகள் நடைபெறும். வங்கி மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர்களின் நிலைப்பாடு என்ன? அவர்கள் ஏற்கனவே பிரம்மாண்டமான வேலை நிறுத்தங்களை நடத்தியுள்ளனர். பிப்ரவரி 12 பொது வேலை நிறுத்தத்திலும் அவர்கள் முழுமையாகப் பங்கேற்க நோட்டீஸ் அளித்துள்ளனர். பிரதான ஊடகங்கள் (Mainstream Media) பற்றி உங்கள் விமர்சனம் என்ன? ஊடகங்கள் கார்ப்பரேட்டுகளின் கையில் உள்ளன. அவை தொழிற்சங்கப் போராட்டங்களைத் திட்டமிட்டு மறைக்கின்றன அல்லது தவறாகச் சித்த ரிக்கின்றன. வேலை நிறுத்தத்தின் இறுதி இலக்காக நீங்கள் எதை முன்வைக்கிறீர்கள்? தொழிலாளர் போராட்டங்கள் வெற்றி பெற வேண்டுமானால், களப்போராட்டத்தோடு ஒரு வலு வான அரசியல் மாற்றமும் (Political Alternative) நாட்டுக்குத் தேவை.  தமிழில் தொகுப்பு : ஆர்.சிங்காரவேலு