articles

ஈரான் போர்- இந்தியா சந்திக்கும் பொருளாதார பிரச்சனைகள்! - அ.அன்வர் உசேன்

ஈரான் போர்- இந்தியா சந்திக்கும் பொருளாதார பிரச்சனைகள்!

ஈரான்  மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திவரும் தாக்குதல்களும் ஈரானின் எதிர் தாக்குதலும் உலக அளவில் பல பொரு ளாதார விளைவுகளை உருவாக்கி வருகின்றன. ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இருப்பது; அதனை கைப்பற்ற அமெரிக்காவின் திட்டம்; வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிறுவனங்கள் கணிச மாக செயல் இழப்பு; எரிசக்தி நெருக்கடி; விலை உயர்வு என பல அம்சங்களில் இந்த போர் கடுமை யான தாக்கத்தை உருவாக்கியுள்ளது.இந்தியாவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கேள்வி என்னவெ னில் பாஜக ஒன்றிய அரசு இந்த நெருக்கடியை எதிர் கொள்ளும் வல்லமை பெற்றுள்ளதா என்பதுதான்! எரிசக்தி பற்றாக்குறை இந்தியா மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது சமையல் எரிவாயு பற்றாக்குறையால் தான்! கடந்த 15 ஆண்டுகளில் சமையல் எரிவாயுவும் கச்சா எண்ணெய்யும் நமது சொந்த உற்பத்தியைவிட இறக்குமதிதான் பன்மடங்கு அதிகரித்துள்ளது.  ‘ஆத்மநிர்பாரை’ படாடோபமாக அறிவித்த மோடி அரசாங்கம் சமையல் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தி தன்னிறைவில் எந்த கவனமும் செலுத்தவில்லை. எனவேதான் ஹோர்முஸ் நீரிணை முடங்கிய பொழுது நமக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்பொழுதும் அந்த தட்டுப்பாடு நீடிக்கிறது.

 இந்தியாவின் ‘crude basket’ எனப்படும் கச்சா எண்ணெய் கலவை ஒரு பேரலுக்கு சுமார் 78 டாலரிலிருந்து 150 டாலராக உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஒவ்வொரு 10 டாலர் உயர்வும் இந்தியாவுக்கு கூடுதலாக 16 பில்லியன் டாலர் (ரூ.1,54,000 கோடி) செலவை கூடுதலாக உரு வாக்குகிறது. ஜூன் மாதம் வரை போர் நீடித்தால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 200 டாலரை தொடும் என அஞ்சப்படுகிறது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் நாம் வலுவாக இருக்கும் ஒரே கார ணத்தால்தான் பெட்ரோல்/டீசல் பற்றாக்குறையி லிருந்து தற்காலிகமாக தப்பித்துள்ளோம். போர் நீடித்தால் இதுவும் நம்மை பாதிக்கும். சமை யல் எரிவாயு, இயற்கை எரிவாயு ஆகியவை பற்றாக் குறையால் உணவகங்கள், கல்வி நிலையங்கள், போக்குவரத்து ஆகியவை கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. மோடி அரசின் தவறான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு நிலை இந்தியாவுக்கு துன்பங்களையே விளைவித்துள்ளது.

ரூபாய் மதிப்பு சரிவு போருக்கு முன்பே ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டிருந்தது. போர் இந்த சரிவை துரிதப்படுத்தி யுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வேகமாக 95ஐ நெருங்கிக் கொண்டுள்ளது. போர் தொடங்கிய ஒரு மாதத்தில் 4.2% சரிவைக் கண்ட ரூபாய் கடந்த ஓராண்டில் 10.94% சரிவை சந்தித்துள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி இது! ரூபாயின் சரிவை தடுக்க ஏராளமான டாலர்களை ரிசர்வ் வங்கி நிதிச்சந்தையில் இறக்க வேண்டிய கட்டாயம் உரு வானது. போர் தொடங்குவதற்கு முன்பு பிப்ரவரி 27இல் 729 பில்லியன் டாலர்களாக இருந்த ரிசர்வ் வங்கி கையிருப்பு மார்ச் 3ஆவது வாரத்தில் 698 பில்லி யனாக சரிந்தது. எனினும் போர் காரணமாக ஏற்படும் சரிவை தடுப்பது சாத்தியமில்லை என மதிப்பிட்ட ரிசர்வ் வங்கி தற்பொழுது டாலர் கையிருப்பை நிதிச்சந்தையில் ஈடுபடுத்துவதை வெகுவாக குறைத்து விட்டது. 2014ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவி யேற்ற பொழுது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ58.66. இது 2026 மார்ச் 27இல்  94.60 ஆக சரிந்துள்ளது. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ரூபாய் சரிந்த பொழுது குஜராத் முதல்வராக இருந்த மோடி அதனை கடுமையாக விமர்சித்தார்.

பாஜக தூண்டுதலின் பேரில் சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன் போன்றோர் எக்ஸ்  தளத்தில் விமர்சித்தனர். ஆனால் இன்று அனைவரும் மவுனம் காக்கின்றனர். ரூபாய் சரிவு என்பது மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக பரிணமித்துள்ளது.  ஏற்றுமதி பாதிப்பு இந்த போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கீழ்க்கண்ட பல பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ளன: lபாஸ்மதி அரிசி- (ஆண்டு ஏற்றுமதி ரூ.40,000 கோடி) lஉணவு தானியங்கள், பழங்கள், பால் பொருட்கள்- (ரூ.94,000 கோடி) lமின்னணுப் பொருட்கள்- (ரூ.36,000 கோடி) lநகைகள், பட்டை தீட்டிய வைரம், செயற்கை கற்கள்-(ரூ.18,000 கோடி) lஉடைகள் மற்றும் ஆயத்த ஆடைகள்-(ரூ.45,000 கோடி) lஇஞ்சினியரிங் பொருட்கள்-(ரூ.30,000 முதல் 40,000 கோடி) lமுட்டை, மாமிசம். தமிழ்நாட்டில் ஏற்றுமதி பாதிப்புகள்: lதிருப்பூர் பின்னலாடைகள்- ரூ.450-500 கோடி lதிருப்பூர், கோவை, ஈரோடு,கரூர் ஆடைகள் மற்றும் பஞ்சாலைப் பொருட்கள்- ரூ.27,000 கோடி lநாமக்கல் முட்டை- ஒரு நாளைக்கு 35 முதல் 40 லட்சம் முட்டைகள். lகோவை மாவரைக்கும் எந்திரங்கள்/ இஞ்சினியரிங் பொருட்கள் lபொள்ளாச்சி கயிறு பொருட்கள்-ரூ.200 கோடி lகிருஷ்ணகிரி மாம்பழக் கூழ்- ரூ.2000 கோடி lகோவில்பட்டி கடலை மிட்டாய்- ஒரு நாளைக்கு ரூ.20 லட்சம்.

இந்த பொருட்களின் ஏற்றுமதி போரினால் கடுமை யாகச் சரிந்துள்ளது. மேலும் இந்தியா ஆண்டுக்கு சுமார் ரூ.12,000 கோடி மதிப்புள்ள பொருட்களை ஈரானுக்கு ஏற்றுமதி செய்கிறது. சுமார் ரூ.1,000 கோடியை ஈரானின் சபார் துறைமுகத்தில் முதலீடு செய்துள்ளது. ஆனால் இந்தியாவுக்கு ஏப்ரல் 26 வரைதான் சபார் துறைமுகத்தை பயன்படுத்த அமெரிக்கா கெடு விதித்துள்ளது. நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து இந்த திட்டத்திலிருந்து விலகினால் ஈரானு டனான வர்த்தகத்தையும் துறைமுகப் பயன்பாட்டை யும் இந்தியா இழக்கும்.

 போரினால் விளைந்துள்ள இழப்புகள் மோடி அரசின் தவறான வெளியுறவுக் கொள்கைகள் காரணமாக பன்மடங்கு அதி கரித்துள்ளன.   வெளியேறும் அந்நிய முதலீடுகள் ஈரான் போர் காரணமாகவும் எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும் மார்ச் மாதம் மட்டும் 27ஆம் தேதி வரை அந்நிய நிதி நிறுவனங்கள் 12 பில்லியன் டாலர் முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளன. இந்த நிதியாண்டு முழுவதும் வெளியேறிய நிதி மூலதனம் 19 பில்லியன் எனில் மார்ச் மாதத்தில் மட்டும் 12 பில்லியன் டாலர்கள் வெளியேறியுள்ளன. பாஜக அரசின் தவறான அணுகுமுறையின் இன்னொரு விளைவு இது! வளைகுடா நாடுகளில் சுமார் 1 கோடி இந்தியர் கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் இந்தியாவுக்கு அனுப்பும் ஊதியம் உட்பட பல்வேறு நிதியின் அளவு சுமார் 52 பில்லியன் டாலர்கள். இது இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையை ஈடு செய்வதில் பெரும் பங்கை வகிக்கிறது.

ஈரான் போர் காரணமாக இது கடுமையாக பின்னடைவைச் சந்திக்கும். இதைவிட கூடுதலாக கவலை அளிக்கும் செய்தி என்பது போர் காரணமாக உருவாகும் வேலை இழப்புகள் ஆகும். வளைகுடா பகுதியில் பல எண்ணெய் வயல் கள் தாக்குதல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டி ருப்பதால் வேலை இழப்பு ஆபத்து உண்டு என கருதப்படுகிறது.  

மேலும் உரம், சமையல் எண்ணெய் இறக்குமதி உட்பட பல விளைவுகளும் இந்தியாவை பாதிக்கக் கூடும். இதன் ஒட்டு மொத்த விளைவாக இந்தி யாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 7.2%லிருந்து 6.5% ஆக சரியும் ஆபத்து உள்ளது. இப்படி பல பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால் தொழில் முனைவோரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் கடும் நட்டத்தையும் வாழ்வாதார இழப்புகளையும் எதிர்  கொண்டுள்ளனர். இந்த பிரச்சனைகளை எப்படி கையாளப்போகிறது என்பதை அரசியல் கட்சிகளிட மும் மக்களிடமும் விளக்க வேண்டிய  கடமை பாஜக அரசுக்கு உள்ளது.