articles

img

“மேம்பாட்டிலும் ஸ்கோர்... வேலைவாய்ப்பிலும் ஸ்கோர்”

“மேம்பாட்டிலும் ஸ்கோர்... வேலைவாய்ப்பிலும் ஸ்கோர்”

அசத்தும் கேரள தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ்! கேரளத்தில் தேர்தல் களம் உச்சக்கட்டதை எட்டியுள்ளது. குறிப்பாக, தொழில்துறை அமைச்சர் பி. ராஜீவ் போட்டியிடும் தொகுதியில் மக்களின் ஆதரவு ‘நாட் அவுட்’ பேட்ஸ்மேன் போலத் தொடர்கிறது. அமைச்சர் ராஜீவ் தனது தொகுதியில் வெறும் சாலை, பாலம் போன்ற கட்டுமானங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிலும் கவனம் செலுத்தியுள்ளார். ₹450 கோடி மதிப்பிலான புற்றுநோய் மையம், 115 படுக்கைகள் கொண்ட நவீனத் தாய்-சேய் வார்டு எனச் சுகாதாரத் துறையில் அவர் செய்த மாற்றங்கள் தொகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது. தொழில்துறை அமைச்சராக அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்களால், ‘தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள்’ பட்டியலில் கேரளம் முதலிடம் பிடித்தது. காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கின் கோட்டையாகக் கருதப்பட்ட இடங்களிலும் கூட  இப்போது ‘மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு’ என்ற முழக்கமே எதிரொலிக்கிறது. “ராஜீவ் மீண்டும் சிறப்பாக விளையாடுவார்” என்பதே தொகுதி மக்களின் மைண்ட் வாய்ஸாக உள்ளது.