tamilnadu

img

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும்!

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும்!

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நம்பிக்கை சென்னை, பிப். 11 – தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என்று நம்புவதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்தார். சிந்தனை சிற்பி ம. சிங்காரவேலரின் 80-ஆம்  ஆண்டு நினைவு தினமான புதனன்று (பிப்.11) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில்  உள்ள அவரது உருவச் சிலைக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய அவர் : 100 ஆண்டுக்கு முன்பே பொதுவுடமை கருத்துக் களை தமிழ்நாட்டில் விதைத்தவர் சிங்கார வேலர். 1923-ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலாக மே தினத்தை நடத்தி, மே தினத்தை விடு முறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோ ரிக்கை எழுப்பியவர். சமத்துவம், சாதிய வேறுபாடுகளுக்கு எதிராக, அறிவியல் கருத்துக்களை பரப்ப, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக வீரியமிக்க கட்டுரை களை எழுதியவர். தொழிலாளர் நலனுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த சிங்காரவேலர் சிந்தனைகளை சிரமேற்கொண்டு செயல்படு வோம். இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த  அவர், கூட்டணிக் கட்சிகளோடு பிப். 22 முதல்  பேச்சுவார்த்தை நடத்துவதாக திமுக அறிவித்து உள்ளது. இது காலதாமதம் இல்லை. மதச்சார்பற்ற  முற்போக்கு கூட்டணி நீண்ட காலமாக ஒற்றுமை யாக செயல்படுகிறது. பெரிய பிரச்சனை இல்லா மல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடியும் என்று நம்புகிறோம். கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுக முதலில் குழு அமைக்காத நிலையில், பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை என்ற பிரச்ச னையே எழவில்லை. திமுக முறையாக பேச்சு வார்த்தைக்குழு அமைத்த பிறகு தொகுதி பங்கீடு  குறித்து பேசுவோம். எங்களுடைய முன்னுரிமை தொகுதியை தேர்வு செய்து வைத்துள்ளோம். பேச்சுவார்த்தைக்குழு முன்பு தேவையான எண்ணிக்கை, தொகுதியை கூறுவோம். இமயமலை அளவுக்கு ஊழல் செய்துள்ள பாஜகவோடு கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவை குறைசொல்ல அன்புமணிக்கு எந்தவித  அருகதையும் இல்லை என்றார். இந்நிகழ்வின்போது கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் சி. திருவேட்டை, ஆர்.  முரளி, வே. ஆறுமுகம், வெ. தனலட்சுமி, எஸ்.வி.  வேணுகோபாலன், மூத்த தலைவர் எம்.வி. கிருஷ்ணன், துறைமுகம் பகுதிச் செயலாளர் ஆர்.  குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.