இந்த முறையும் ‘பூஜ்ஜியம்’ தான் கிடைக்கும் பாஜக-வின் பாசிச அரசியல் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி சென்னை, பிப். 11 - பாஜக-வின் பாசிச அரசியல் தமிழ் நாட்டில் நிச்சயம் நிறைவேறாது என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கூறி னார். சென்னையில் புதனன்று நடை பெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில், செய்தி யாளரின் கேள்விகளுக்கு பதிலளித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை யாற்றினார். அப்போது அவர் கூறிய தாவது: திமுக கூட்டணிக்கும், இரண்டாவது இடத்தில் இருப்பவர்களுக்கும் வித்தி யாசமே 12 சதவிகிதம். 3 சதவிகிதம் வித்தியாசம் இருந்தாலே வெற்றி உறுதி. 12 சதவிகிதம் என்றால், அது நிச்சயம் அபார வெற்றி தான்! அதற் கென்று, நாங்கள் மெத்தனமாக இருக்க மாட்டோம். எங்களைப் பொறுத்த வரைக்கும், இந்த சர்வே முடிவு, எங்க ளுக்கான பூஸ்ட்! திமுக அரசு தொடர்ந்தால் தான், தமிழ்நாட்டின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதே சமயம், இவ்வளவு நன்மைகள் செய்யக் கூடிய திமுக அரசுக்கு ஒன்றிய பாஜக அரசு எப்படியெல்லாம் நெருக்கடி களைக் கொடுக்கிறது என்பதையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக் கிறார்கள். நிதிப்பகிர்வு, வரிப்பகிர்வு, சிறப்புத் திட்டங்கள், ரயில்வே திட்டங்கள் என்று எல்லாவற்றிலும் தமிழ்நாட்டிற்கு அநீதியையும் துரோகத்தையும்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது வெளியிட்ட பட்ஜெட் டில்கூட அவர்கள் தமிழ்நாட்டிற்கு தந்தது ‘ஜீரோ’தான்! இப்போது, என்டிஏ கூட்டணிக்கு அதே ஜீரோவை மக்க ளும் திருப்பித் தர போகிறார்கள். நிர்வாக ரீதியாக இந்த அளவுக்கு இடைஞ்சல்கள் கொடுப்பது, ஆளுநரை வைத்தும், அவதூறுகள் பரப்பியும், அரசியல் ரீதியாக சீண்டிப் பார்க்கிறார் கள். ஊழல் கறை படிந்த அத்தனை பேரையும் ஒன்று சேர்த்துக்கொண்டு, பொய்களை பரப்பிக்கொண்டு, தேர்தலை சந்திக்க வருகிறார்கள். இந்த ஊழல் கூட்டணிக்கு பெயர் இரட்டை எஞ்சின். அந்த டப்பா எஞ்சினுடைய லட்சணத்தை தி்ல்லி, உத்தரப் பிர தேசம், பீகார் என்று பல மாநிலங்களில் பார்த்துகொண்டு தான் இருக்கிறோமே? பாஜகவைப் பொறுத்தவரைக்கும், வெறுப்பைப் பரப்பி, பிரச்சனைகளை உருவாக்கி, அதில் குளிர்காய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு நாட்டிலுள்ள ஜனநாயக சக்தி கள் நிச்சயம் இடம் கொடுக்கக் கூடாது. தமிழ்நாட்டிற்கு சேரவேண்டிய நிதி யையும், நீதியையும் நிச்சயமாக நாங்கள் பெற்றுத் தருவோம். பாஜக வின் பாசிச அரசியல் தமிழ்நாட்டில் நிச்சயம், நிச்சயம், நிச்சயமாக அது எடுபடாது! நிறைவேறாது! தமிழ்நாடு வெல்லும்! இந்தியா விற்கே வழிகாட்டும்!. இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் தெரிவித்தார்.
