india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு பிப்ரவரி வரை 11 மாதங்களில் இந்தியாவில் 10,113 தொழில் நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டை நிறுத்தியுள்ளன எனபொதுத்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இயங்கி வந்த 1,322 தொழில் நிறுவனங்களும் இதில் அடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

                                            ******* 

சிறப்பு டி.ஜி.பி.ராஜேஷ்தாஸ் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்கச் சென்ற பெண் ஐ.பி.எஸ்.அதிகாரியை தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

                                            ******* 

ரயில் சேவையில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க, புதிய ஒருங்கிணைந்த, ‘உதவி மைய” எண் 139 (HELPLINE) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

                                            ******* 

கல்விரீதியிலும், சமூகரீதியிலும் பின்தங்கிய சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்க சட்டமன்றத்திற்கு  அதிகாரம் உள்ளதா என்றவிவகாரம் தொடர்பாக அனைத்து மாநிலங்களும் பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                                            ******* 

தூர்தர்ஷன்,அகில இந்திய வானொலியில் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்வதற்கான நேரத்தை தேர்தல் ஆணையம் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

                                            ******* 

இத்தாலியின் தலைநகர் ரோமில் நடைபெற்ற தரவரிசை மல்யுத்தத் தொடரில் இந்தியாவின் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்.

                                            ******* 

லட்சத்தீவு அருகே 2,100 கோடிரூபாய் மதிப்புடைய போதைப் பொருட்களை கைமாற்ற நடைபெற்றமுயற்சியை இந்திய கடலோரக் காவல் படையினர் முறியடித்தனர்.

                                            ******* 

5 மாநில தேர்தல் எதிரொலியாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதியைதிட்டமிட்ட தேதிக்கு முன்னதாக வே முடித்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

                                            ******* 

தோ்வுத் தாள் கசிவு வழக்கில் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட ராணுவ மேஜா் திருமுருகன் தங்கவேலை மார்ச் 15 ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க புனே நீதிமன்றம் உத்தரவிட்டது.

                                            ******* 

சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் என்ற அறிவிப்பைக் கண்டித்து, வழக்குகளை நேரடியாக விசாரிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கறிஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

                                            ******* 

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் நடத்தை விதிகளுக்குட்பட்டு உள்ளனவா எனஆராய்ந்து உடனடியாக உத்தரவுகளை பிறப்பிக்க கோரிய வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.