கொளத்தூர் தொகுதி சார்பாக சென்னைக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
***************
செங்கல்பட்டு பொதுத்துறை நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தி தொடங்குவது குறித்து மத்திய அரசிடம் பேச தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தில்லி செல்லவுள்ளார்.
***************
பொதுவிநியோகத் திட்டத்திற்கான பருப்பு, பாமாயில் கொள்முதல் ஒப்பந்தத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
***************
இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் நெருப்பு பற்றி எரியும்சரக்குக் கப்பலின் நெருப்பை அணைக்கும் பணியில் 3 இந்தியக் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.
***************
சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 297 மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
***************
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
***************
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்றின் முதல் ஆட்டங்களில் இந்தியாவின் ராம்குமார், அங்கிதா போராடி வெற்றி கண்டனர்.
***************
சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து ஜூன் 10 ஆம் தேதி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட ஆந்திர அரசு முடிவு செய்திருப்ப தாக தமிழக நீர்வளத்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
***************
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கி வந்த பாதுகாப்புத் துறைக்கான நிதி உதவிகளை ரத்து செய்து முன்னாள் அதிபர் டிரம்ப் எடுத்த முடிவை, தற்போதைய அதிபர் ஜோ பைடனும் நீட்டித்துள்ளார்.
***************
நாரதா லஞ்ச ஊழல் வழக்கில் கைதான நால்வரையும் வீட்டுச் சிறையில் வைக்குமாறு கொல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள் வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
***************
இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டு, புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்றுக் கொள்ளவுள்ளதாக பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
***************
மத்திய அரசின் புதிய விதிகளுக்கு எதிராக தில்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
***************
நாடு முழுவதும் இதுவரை 11,717 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 236 பேருக்கு கருப்புபூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
***************
பயணிகள் வருகை குறைவாகக் காணப்பட்டதால் 12 சிறப்பு ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.