india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

ஆர்டர் கொடுக்கப்பட்ட 11 கோடி தடுப்பூசி 

இந்தியாவிற்கு மே,ஜூன், ஜூலை மாதங்களுக் காக 11 கோ கொரோனா தடுப்பூசிகள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது என்றுமத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 11 கோடி தடுப்பூசிடோஸ் வாங்க ஏப்ரல் 28ம்தேதி ரூ.1,723 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது.

                        **********

பிஜி நீட் தேர்வு ஒத்திவைப்பு 

பிஜி நீட் தேர்வு மேலும்4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருந்த பிஜி நீட் தேர்வு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

                        **********

ஆந்திராவில்  2 வாரம் பகுதி நேர ஊரடங்கு 

ஆந்திரா மாநிலத்தில் 14 நாட்களுக்கு பகுதி நேரஊரடங்கை அமல்படுத்தி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட் டுள்ளார். மே 5 ஆம் தேதியில் இருந்து காலை 6 மணிமுதல் 12 மணி வரை மட்டுமேபொதுமக்கள் வெளியில்வர அனுமதி அளிக்கப்பட் டுள்ளது.

                        **********

இந்தியாவுக்கு உதவ எஸ்பிஐ வங்கி  ரூ.71 கோடி ஒதுக்கீடு

கொரோனா தொற்றின்இரண்டாவது அலையைஎதிர்த்துப் போராட இந்தியாவுக்கு உதவ பல்வேறு ஆதரவு முயற்சிகளை மேற்கொள்வதற்காக எஸ்பிஐ வங்கி ரூ.71 கோடி ஒதுக்கியுள்ளது. மோசமான பாதிப்புக்குள் ளான சில மாநிலங்களில் 1000 படுக்கைகள் கொண்டதற்காலிக மருத்துவமனைகள், 250 படுக்கை ஐசியூ வசதிகள் மற்றும் 1000 படுக்கைகள்கொண்ட தனிமைப்படுத்தும் வசதிகள் ஆகியவற்றை அமைக்க எஸ்பிஐ வங்கி ரூ.30 கோடியை அர்ப்பணித் துள்ளது.

                        **********

4,000 ரயில் பெட்டிகள் தயார் 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைஅளிக்க 4,000 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 4,000ரயில் பெட்டிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 64,000 படுக்கைகள் ஏற்படுத் தப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

                        **********

ஒடிசாவில்  14 நாள் ஊரடங்கு...

ஒடிசா மாநிலத்தில் கொரோனா நோய் தொற்றினால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால், மாநிலம் முழுவதும் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகின்றது. புதனன்று காலை 5 மணி முதல் மே 19 ஆம் தேதி காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். வார விடுமுறைகளில் முழுஅடைப்பு பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

                        **********

தடுப்பூசி தட்டுப்பாடு சில மாதம் நீடிக்கும்

நாடு முழுவதும் 18 - 44வயதினருக்கு மேம் 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிலையில் 18 -44 வயதினருக்குத் தேவையான தடுப்பூசிகள் இன்னும் தங்களிடம் வந்தடையவில்லை என்று தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் தெரிவித்துள்ளன.இந்நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்குஅளித்த நேர்காணலில் ஆதார் பூனவல்லா கூறும்போது, “இந்தியாவில் சில மாதங்களுக்கு கொரோனா தடுப்பூசிதட்டுப்பாடு நீடிக்கும். ஜூலைமாதத்தில் 100 மில்லியன் வரை தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.