கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகளில் 64 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
***************
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின்வரத்து 2018 கன அடியாக அதிகரித்துள்ளது.
***************
சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கிகோழிக்கோடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
***************
இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று அசாம் எல்லையில் உள்ளதனது ஆக்ஸிஜன் ஆலையைத் திறக்கபூடான் அரசு சம்மதித்துள்ளது.
***************
ஸ்பெயினில் சாக்லேட்டால் செய்யப்பட்ட பிக்காசோவின் Guernica ஓவியம் பொதுமக்கள் முன்னிலையில் காட்சிப் படுத்தப்பட்ட நிலையில் திரளான பார்வையாளர்களை கவர்ந்து இழுத்துள்ளது.
***************
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்கூறியுள்ளது.
***************
உலக கோப்பை போட்டியின் ரிகர்வ் பிரிவில் இந்தியா 3 தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல்றையாகும்.
***************
துபாயில் உலகின் மிகப்பெரிய ‘சர்வதேச விண்வெளி மாநாடு” அக்டோபர் மாதம் நடைபெறும் எனதுபாய் முகம்மது பின் ராஷித் விண் வெளி மையத்தின் பொது இயக்குநர் தெரிவித்துள்ளார்.
***************
கன்னியாகுமரி-இராமேஸ்வரம், கோவை-பெங்களூரு, சென்னை-மைசூரு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவை-சென்னை இடையேயான சதாப்திரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
***************
அஞ்சல் நிலையங்களும் பிற்பகல் 2 மணிவரை செயல்படும்என்று தபால் துறை சார்பில் சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.
***************
நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் 14 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்திற்கு வழங் கப்பட்டது. தட்டுப்பாடு தீரும் வரை தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
***************
மக்கள் வெளியிடும் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு வாட்ஸ்அப் நிர்வாகத்தை பொறுப்பாக்க முடியாது, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை உத்தரவிட்டுள்ளது.
***************
பக்கவாத நோயாளிகளின் கணுக்கால் இயக்கத்தை மேம்படுத்தும் கருவியை மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளனர்.
***************
வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் கொண்டுவரப்படும் ஆக்சிஜன் மற்றும் அதுதொடர்பான சரக்குகளுக்கு துறைமுக கட்டணம் ரத்து செய்யப்பட்டுள் ளது.
***************
அஜர்பைஜானில் நடைபெற இருந்த உலக கோப்பை துப் பாக்கி சுடுதல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.