புதுதில்லி, நவ. 5 - உத்தரப்பிரதேச அரசு 2004-இல் கொண்டு வந்த மதரஸா கல்வி வாரியச் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
முன்னதாக, மதரஸா கல்வி வாரியச் சட்டத்திற்கு எதிராகவும், மத ரஸாக்களை கலைத்தும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மதரஸா கல்வி வாரியச் சட்டம் கடந்த 2004-ம் ஆண்டு சமாஜ்வாதி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டது. ஆனால், உ.பி மதரஸா கல்வி வாரியச் சட்டம், மதச்சார்பின்மை விதிமுறை களை மீறுவதால் அது அரசியல் சாச னத்துக்கு எதிரானது எனக் கூறி, அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் மதரஸா பள்ளி களை கலைத்து விட்டு, அங்குள்ள மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றவும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இது சுமார் 17 லட்சம் மதரஸா மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது. இதை எதிர்த்து மதரஸா பள்ளிகள், மதரஸா ஆசிரியர்கள் சார்பில் உச்சநீதிமன்றத் தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், செவ்வாயன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், “உத்தரப்பிரதேச அரசு 2004-இல் கொண்டு வந்த மதரஸா கல்வி வாரி யச் சட்டம் செல்லும். மதரஸா சட்டத்தை ரத்து செய்தும், மத ரஸாக்களை கலைத்தும் அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என்று நீதிபதிகள் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், மத மற்றும் மொழிச் சிறு பான்மையினர் தங்கள் விருப்பப்படி கல்வி நிறுவனங்களை நிறுவு வதற்கும் நிர்வகிப்பதற்கும் அரசிய லமைப்புப் பிரிவு 21ஏ உரிமை வழங்கு கிறது. அதேநேரம் மதச் சிறுபான்மை நிறுவனங்களின், சிறுபான்மை தன்மையை அழிக்காமல் தேவை யான தரத்தில் மதச்சார்பற்ற கல்வி யை வழங்குவதை உறுதிசெய்வ தற்கும், மதரஸாக்களில் கல்வியின் தரத்தை ஒழுங்குபடுத்தவும் அரசி யலமைப்பின் ஏழாவது அட்ட வணையிலுள்ள பிரிவு 66 அனுமதி வழங்குகிறது. எனினும், அது மதரஸாக்களின் நிர்வாகத்தில் தலையிடாது. அந்த வகையில், குழந்தைகள் போதுமான கல்வியை பெறுவதை உறுதி செய்வதற்கான அரசின் நேர்மறையான கடமையுடன்- உத்தரப்பிரதேச அரசு 2004-ல் கொண்டு வந்த மதரஸா கல்வி வாரியச் சட்டம் ஒத்துப்போகிறது. மத ரஸாக்களுக்கான சட்டம், சில மதப் பயிற்சிகளை வழங்குவதாலேயே அது அரசியலமைப்புக்கு முரணானது ஆகி விடாது.
மத போதனை, வரலாற்று ரீதியாக வும், கலாச்சார ரீதியாகவும் இந்தி யாவில் ஒருபோதும் வெறுக்கத்தக்க தாக இல்லை. அரசியலமைப்பின் 23-ஆவது பிரிவு மத போதனையை அங்கீகரித்துள்ளது” என்றும் குறிப்பிட்டனர்.