இந்தியா கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், இந்தியா கூட்டணி, தனது துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன ரெட்டியை அறிவித்துள்ளது.
சுதர்சன ரெட்டி, 2011 ஆம் ஆண்டு வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர். அவர் சட்டம், அரசியல், மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் தீவிரமாகக் குரல் கொடுத்தவர் என்பதும், ஓய்வு பெற்ற பிறகும் அரசியல் சாராத சமூக மற்றும் பொதுநல இயக்கங்களில் தொடர்ந்து பங்கேற்று வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.