ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒன்றிய ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸாக வழங்கப்பட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் தெரிவித்தார்.
மேலும் 10.91 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1,865.68 கோடி போனஸாக வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.