மும்பை
இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பில் முதன்மையாக உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் கொரோனா படுவேமாக பரவி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் அங்கு தினசரி பாதிப்பு 49 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49,447 (சனிக்கிழமை நிலவரம்) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 277 பேர் பலியாகியுள்ளனர்.
தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுவதாக மும்பை நகர பாதுகாப்பு துறை அமைச்சராக இருக்கும் அஸ்லாம் ஷேக் அறிவித்துள்ளார்.
"இந்த இரவு நேர முழு ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். உணவகங்களில் பார்சல் வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்படும். அலுவலக ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணிபுரிய வேண்டும். தற்போதையை சூநிலைகளுக்கான கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறை விரைவில் வெளியிடப்படும்" என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இரவு நேர முழு ஊரடங்கு நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.