இந்தியா பொருளாதாரத்தில் 4 ஆவது இடத்திற்கு முன்னேறி விட்டது, விரைவில் வல்லரசு ஆகும் என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோர் தங்கள் அரசின் தோல்வியை மறைக்க எதையாவது கூறி புகழ்பாடி வருகின்ற னர். ஆனால் உண்மையில் நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் தான் கிடக்கிறது.
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களான அதானி, அம்பானி மற்றும் பாஜகவிற்கு நன்கொடை யை வாரி இறைக்கும் டாடா நிறுவ னங்களைத் தவிர மற்ற அனைத்து நிறு வனங்களும் கடுமையான பொருளா தார நெருக்கடியை சந்தித்து வருகின் றன. தற்போது வாகன தயாரிப்பு சந்தையும் அடி மேல் அடி வாங்கி வரு கிறது.
மோடி அரசின் தவறான பொருளா தாரக் கொள்கையால் நாட்டில் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான வாகனங் கள் விற்காமல் ஸ்டாக்கில் உள்ளது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூறியுள்ளன. ஸ்டாக்கில் இவ்வளவு கார்கள் தேங்கி இருப்பது இதுவே முதல் முறையாகும் என வாகன தயா ரிப்பு நிறுவனங்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். இந்த கார்களின் விலை ரூ.79,000 கோடியை தாண்டும் என தக வல் வெளியாகியுள்ளது.