இந்தூர்:
குஜராத் ஜாம் நகரிலிருந்து, மத்தியப் பிரதேச மாநிலம் இந் தூருக்கு, 30 டன் ஆக்ஸிஜனை ஏற்றிக்கொண்டு, டேங்கர் லாரி ஒன்று புறப்பட்டுச் சென்றது.
ஜாம் நகருக்கும் இந்தூருக் கும் இடைப்பட்ட 700 கி.மீ. தூரத்தை அவசரத் தேவை கருதி, லாரி ஓட்டுநர் சைலேந்திரகுஷ்வா துரிதமாக ஓட்டிக் கடந்துள்ளார். வெறும் 3 மணிநேரம்மட்டுமே இடையில் தூங்கியதுடன், ஒரேயொரு முறை மட்டுமேஉணவுக்காக நிறுத்தியுள்ளார். கொரோனா நோயாளிகளின் உயிரைக் காக்கும் ஆக்சிஜன் நம் கையில் இருக்கிறது என்றபொறுப்பை உணர்ந்ததே அதற்குக் காரணம். அதன்படியே இந்தூருக்குள்ளும் நுழைந்து விட்டார். ஆனால், உரிய இடத்தை லாரி அடைவதற்கு முன்னதாக இந்தூருக்கு உள்ளேயே 2 இடங்களில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பாஜக-வினர் ஆக்சிஜன் டேங்கர் லாரியை நிறுத்தி வைத்து, நோயாளிகளின் உயிரோடு விளையாடியுள்ளனர்.அதாவது, கொரோனா நோயாளிகளுக்காக பிரதமர் மோடி 30 டன் ஆக்சிஜனை அனுப்பிவைத்திருக்கிறார் என்பதை மத்தியப் பிரதேச மக்களிடம் காட்டுவதற்காக, பாஜக எம்.பி.சங்கர் லால்வானி, எம்எல்ஏக்கள்ரமேஷ் மெண்டேலா, ஆகாஷ் விஜயவர்ஜியா ஆகியோர் டேங்கர் லாரியை ஆங்காங்கே நிறுத்தி புகைப்படங்கள் எடுத்தும் பூஜைகள் நடத்தியும் தடையை ஏற்படுத்தியுள்ளனர். மோடியைப் புகழ்ந்து நீண்ட உரையும் நிகழ்த்தியுள்ளனர்.
பாஜகவினரின் இந்த விளம்பர வெறி, மத்தியப்பிரதேச மக்களை முகச்சுளிப்புக்கு உள்ளாக்கியதுடன், பல்வேறு தரப்பினரின் கண்டனங்களுக்கும் தற் போது உள்ளாகி இருக்கிறது. ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் 6 பேர் உயிரிழந்த துயரம் பாஜக ஆளும் இதே மத்தியப்பிரதேச மாநிலத்தில்தான் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.