india

img

கோவாவுக்கு ஆக்ஸிஜன் வழங்கியது கேரளம்.... கே.கே.சைலஜாவுக்கு கோவா அமைச்சர் ராணா நன்றி.....

கொச்சி:
கோவாவில் உள்ள கோவிட் நோயாளிகளுக்கு கேரளஅரசு ஆக்ஸிஜன் சிலிண்டர் களை வழங்கியது. கோவா மாநிலத்தில் கோவிட் நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர்.  மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறை மற்ற சில மாநிலங்களைப்போலவே கோவாவிலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனித உயிர்களை காக்க கேரளம் 20,000 லிட்டர் திரவ ஆக்ஸிஜனை கோவாவுக்கு வழங்கியது.

கேரள அரசின் இந்த உதவிக்கு, கோவா சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ராணா ட்விட்டரில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் .கே.சைலஜா டீச்சருக்கு நன்றி தெரிவித்தார். அதில்,  ‘கோவாவில் உள்ள கோவிட் நோயாளிகளுக்கு 20,000 லிட்டர் திரவ ஆக்ஸிஜனை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவிய திருமதி சைலஜா டீச்சருக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். “கோவிட் 19 க்கு எதிரான எங்கள் போராட்டத்தில் நீங்கள் அளித்த ஆதரவுக்கு கோவா மக்கள் நன்றியுள்ளவர்களாக உள்ளனர்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.