india

img

லடாக் போராட்டம் - காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கைது!

லடாக்கில் நடந்த போராட்டம் தொடர்பாக கல்வியாளரும் காலநிலை செயற்பாட்டாளருமான சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 24ஆம் தேதி லடாக்கில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, லே நகரில் வன்முறை வெடித்ததால் காவல் படைகள் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், மோதல்களில் சுமார் 90 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த போராட்டத்திற்குக் கல்வியாளரும், காலநிலை செயற்பாட்டாளருமான சோனம் வாங்சுக் தான் காரணம் என உள்துறை அமைச்சகம் நேரடியாக குற்றம் சாட்டியது. மேலும் அவரது லடாக் மாணவர்கள் கல்வி மற்றும் கலாச்சார இயக்கம் என்ற கல்வி அமைப்பின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சோனம் வாங்சுக் இன்று காவல்துறையால் கைது செய்யப்படார்.
சோனம் வாங்சுக்கு பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வரும் நிலையில் திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தனிப்பக்கத்தில் அவருக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார்.
"நீங்கள் ஒரு பறவையைக் கூண்டில் அடைக்கலாம், ஆனால் அதன் பாடலை அடைக்க முடியாது. நீங்கள் சோனம் வாங்சுக்கை கைது செய்யலாம், ஆனால் அவரிடம் உள்ள உண்மையை மௌனப்படுத்த முடியாது. இந்த மனிதரை நான் அறிவேன். அவர் எதற்காக நிற்கிறார் என்பதை நான் அறிவேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.