india

img

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு!

காஷ்மீர்,ஏப்.23- பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காஷ்மீர் மாநில அரசு நிதியுதவி அறிவித்துள்ளது.
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும் படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் உடல்களைச் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.