புதுதில்லி:
டுவிட்டர் நிறுவனம் வெளியிட்ட இந்திய வரைபடத்தில், ஜம்மு- காஷ் மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகள் தனி நாடாக சித்தரிக்கப்பட்டு இருந் தது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த வரைபடத்தை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.மே 25 முதல் இந்தியாவில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை அமல்படுத்திய ஒன்றிய பாஜக அரசு, அதனைஏற்றுக்கொள்ளாத நிறுவனங்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது.கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய ஐடி விதிகளை ஏற்றுக்கொண்டன. ஆனால், பயனர்களின் தனியுரிமையைப் பறிக்கும் வகையில் புதிய ஐடி விதிகள் இருப்பதாக கூறி, டுவிட்டர் நிறுவனம் மட்டும் அதனை ஏற்க மறுத்துவிட்ட நிலையில், டுவிட்டருக்கான சட்டப் பாதுகாப்பை ஒன்றிய அரசு விலக்கிக் கொண்டது. அடுத்த சில மணிநேரத்திலேயே, மதவன்முறையைத் தூண்ட முயன்றதாக டுவிட்டர் மீது 6 பிரிவுகளில் உ.பி. பாஜக அரசு வழக்கும் பதிவு செய்தது.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்குகளில், ‘புளூ டிக்’ வசதியை நீக்கி,பின்னர் சேர்த்தது; ஒன்றிய சட்டத்துறைஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு, அமெரிக்க பதிப்புரிமை விதிகளைக் காட்டி ஒருமணி நேரம் முடக்கப்பட்டது; ஆகியவிவகாரங்களிலும் டுவிட்டர் குற்றச் சாட்டுக்கு உள்ளானது.மேலும் இப்பிரச்சனைகள் ஓய்வதற்கு உள்ளாகவே, ஜம்மு - காஷ்மீர்,லடாக் பகுதிகள் நீக்கப்பட்ட இந்தியவரைபடத்தை டுவிட்டர் வெளியிட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுந்தது. கண்டனங்களும் எழுந்தன. இதையடுத்து, தவறான வரைபடத்தை நீக்கிய டுவிட்டர் நிறுவனம், சரியான படத்தை வெளியிட்டுள்ளது.தற்போது, டுவிட்டர் நிறுவனம் கலிபோர்னியாவை சேர்ந்த ஜெர்மி கேசலை இந்தியாவிற்கான தனது புதிய குறைதீர்ப்பு அதிகாரியாக நியமித்ததும் சர்ச்சையாகி உள்ளது. இந்திய ஐடி சட்ட விதிப்படி இந்தியர்ஒருவரைத்தான் இந்த பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்ற நிலையில், டுவிட்டர் அதனை மீறிவிட்டதாக புதியகுற்றச்சாட்டு எழுந்துள்ளது.