india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்....

இலங்கையில் தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதை இந்திய அரசும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். 

                              ********************

நெல்லை மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

                              ********************

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிறன்று 97.6 அடியாக குறைந்தது. 

                              ********************

சத்தீஸ்கரில் தனியார் மருத்துவ மனையில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா நோயாளிகள் 5 பேர் உயிரிழந்தனர். 

                              ********************

குஜராத் மாநிலம், சூரத்தில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளை விற்பனை செய்ததாக 6 பேரை சூரத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

                              ********************

கும்பமேளாவில் இருந்து தில்லி திரும்புவோர் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் என்று தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

                              ********************

மாநிலங்களுக்கு 6.69 லட்சம் பாட்டில் ரெம்டெசிவா் மருந்து அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கௌடா தெரிவித்துள்ளார்.

                              ********************

இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

                              ********************

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 12 நாட்களில் 8%-ல் இருந்து 16.69% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

                              ********************

உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட பேரிடரில் மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பேரிடரில் பலியானவா்களின் எண்ணிக்கை 80-ஆக அதிகரித்துள்ளது.

                              ********************

மேற்கு வங்கத்தில் தோ்தலுக்கு முந்தைய நாள் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் ஜாங்கிபூா்தொகுதி வேட்பாளா் பிரதீப்குமார் நந்தி கொரோனா தொற்றால் உயிரிழந்ததால் அந்தத் தொகுதியின்வாக்குப்பதிவு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

                              ********************

கொரோனா மருந்துகளை பதுக்கினாலோ அல்லது கள்ளச்சந்தையில் விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

                              ********************

இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ‘விசா’ வழங்க மத்திய அரசு உறுதி அளித்திருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.