புதுதில்லி:
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறித்து அவதூறாகப்பேசிய, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. டி.என். பிரதாபன் உரிமை மீறல் நோட்டீஸை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அளித்தார்.
அந்த நோட்டீஸில், “ நாட்டின் அழிவுகாலத்தை பற்றி சிந்திக்கும் மனிதர் என்றுநிர்மலா சீதாராமன் ராகுல் காந்தி மீதுஅவதூறு கூறியுள்ளார். மக்களவை உறுப்பினரான ராகுல் காந்திக்கு நாட்டை பிளவுபடுத்தும் குழுக்களுடன் தொடர்பு இருக்கிறது என ஆதாரமில்லாமல் பேசியுள்ளார். நாட்டை இழிவுபடுத்துகிறார் ராகுல் காந்தி எனப் பேசியுள்ளார். இது சபையின் அப்பட்டமான உரிமை மீறலாகும். நாட்டின் அழிவுசக்தி ராகுல் காந்தி என எந்த அடிப்படையில் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டி னார்.
இதுபோன்ற வார்த்தைகள், நாடாளுமன்றத்தின் உரிமை, பெருமை மீதான தாக்குதல். எதிர்ப்புக் குரல்கள் எழுப்புவோரை பிளவுபடுத்தும் சக்தி, அழிவுசக்தி, தேசவிரோத சக்தி எனப் பட்டம் கொடுப்பதை ஏற்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் மக்களவைக்குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், சபையில் நிதியமைச்சர் கூறிய கருத்துக்களை (ராகுல் காந்திக்கு எதிராக) நான்கடுமையாக எதிர்க்கிறேன். சபைக்குள்இதுபோன்ற நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபடக்கூடாது. உடனடியாக, அவர் கூறிய கருத்துக்கு நாங்கள் தீவிர நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.