india

img

விவசாயிகளை வஞ்சித்து விட்டு நாட்டு மாடுகள் குறித்து நாடு தழுவிய தேர்வு..... நரேந்திர மோடி அரசின் ‘ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்’ அமைப்பு தீவிரம்....

புதுதில்லி:
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, மனிதர்களை விட மாட்டுக்குஅதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுவருகிறது.இதற்காக மத்திய அரசின் பால்மற்றும் கால்நடைத்துறை அமைச்சகமானது, ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடுசெய்து.

‘ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்’என்ற தேசிய பசு ஆணையத்தையும் செயல்படுத்தி வருகிறது.அறிவியல் ரீதியாக பசுக்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடு என்றபெயரில், கடந்த 2019-ஆம் ஆண்டுஅமைக்கப்பட்ட இந்த காமதேனு ஆயோக் அமைப்பானது, பால்பொருட்கள் மட்டுமன்றி, பசுவின்மாட்டுச் சாணம், சிறுநீர் ஆகியவற் றையும் சந்தைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாட்டுச் சாணம், சிறுநீரை வைத்து பல்வேறு பொருட்கள் தயாரித்து விற்பதை ஊக்கப்படுத்தி வருகிறது.பசு மாட்டுச் சாணம், சிறுநீர் போன்றவை ‘மருத்துவம்’ மற்றும் விவசாயத்திற்கு பயன்படுவதால் அவைதொடர்பாக தொழில் தொடங்குவோருக்கு 60 சதவிகிதம் வரை மானிய நிதியுதவியும் அளித்து வருகிறது.

கடந்த சிலமாதங்களுக்கு முன்பு மாட்டுச்சாணத்தால் செய்யப்பட்ட செல்போன் சிப் (chip) ஒன்றை, காமதேனு ஆயோக்-கின் தலைவர்வல்லபாய் கத்திரியா அறிமுகப்படுத்தினார். `கவ்சத்வ கவாச்’ (GausatvaKavach) என்ற பெயரிடப்பட்ட இந்தமாட்டுச்சாண சிப்- (chip), செல் போன்களிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார். அதைத்தொடர்ந்து, மாட்டுச் சாணத்தில் இருந்து ‘வேதிக் பெயிண்ட்’ (Vedic Paint) தயாரிக்கப்பட்டு உள்ளது, அதுவும் விரைவில் சந்தைக்குவரும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அடுத்த பரபரப்பை ஏற்படுத்தினார்.புதிய வேதிக் மாட்டுச்சாண பெயிண்டானது, சுற்றுச்சூழலுக்கு நன்மையளிக்கும் வகையில், பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்புபண்புகளை கொண்டது எனவும் அவர் தெரிவித்தார்.இந்நிலையில்தான், ‘‘நாட்டு பசுக்களின் மீதான முக்கியத்துவம் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேசிய அளவிலான ‘பசு அறிவியல்’ தேர்வை நடத்தப் போவதாக,காமதேனு ஆயோக் அறிவித்துள் ளது.

பிப்ரவரி 25 அன்று ‘காமதேனுகெள விக்யான் பிரச்சார் பிரசார்எக்ஸாம்’ என்ற பெயரில் தேசிய அளவில் நடைபெறும் இந்த இணையதளத் தேர்வில் ஆரம்பப் பள்ளி மாணவர்கள், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள்மற்றும் பொதுமக்கள் என நான்குதரப்பினரும் கலந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.தேர்வுக்கான பாடத்திட்டம் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் இணையதளத்தில் இருக்கும். தேர்வில் பங்கு பெறுவோர் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் உண்டு. வெற்றி பெறும் நபர்களுக்குசான்றிதழுடன் பரிசுகளும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது விவசாயிகள் மத்தியில்அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பசுமாடுகள் குறித்தும் அதன் பொருட்களை சந்தைப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நல்லதுதான். ஆனால், வேளாண்சட்டங்கள் மூலம் விவசாய நிலங் களை கார்ப்பரேட்டுகள் கையில் கொடுத்தபின், விவசாயிகளை அந்த கார்ப்பரேட்டுக்களுக்கு கொத்தடிமையாக்கிய பின், கால்நடைகள் வளர்ப்பு மட்டும் தனியாக எப்படி நடைபெறும்? விவசாயிகளையும், அவர்களின் நிலங்களையும் பாதுகாக்காமல் மாடுகளை மட்டும் எப்படி பாதுகாக்க முடியும் என்று விவசாயிகள் கேள்விகளை எழுப்பத் துவங்கியுள்ளனர்.