india

img

லக்கிம்பூர் வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல்!

விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி நாடு முழுவதும் விவசாயிகள் அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கெரியில் கடந்த 3ஆம் தேதி ஊர்வலமாகச் சென்ற விவசாயிகள் மீது, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா காரை ஏற்றிக் கொன்றார். இதில் 4 விவசாயிகள் உள்பட 9 போ் கொல்லப்பட்டனர்.
மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்க ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் நாடு முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹரியாணா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்களில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
இன்று காலை 10 மணி தொடங்கிய இந்தப் போராட்டம் மாலை 4 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.