ஹரியானா மாநிலம் சம்பு எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி அம்மாநில போலீசார் தாக்குதல் நடத்தினர்.
வேளாண் விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், சம்பு எல்லையில் இருந்து தில்லியை முற்றுகையிட இன்று பிற்பகல் பேரணியை தொடங்கினர். போலீசார் அமைத்த தடுப்புகளை விவசாயிகள் கடந்து சென்றபோது, அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி ஹரியானா போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் விவசாயிகள் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
விவசாயிகள் போராட்டத்தைத் தடுக்க, முன்னதாக அம்பாலா மாவட்டம் முழுவதும் டிசம்பர் 9-ஆம் தேதி வரை இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன. கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தியும், ஐந்து பேருக்கு மேல் கூடுவதைத் தடை செய்வதாக அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.