“பொதுமக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது”
பொதுமக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என காங்கிரஸ் மூத்த தலை வரும், மக்களவை எதிர்க்கட்சித் தலை வருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டி யுள்ளார். இதுதொடர்பாக நாடாளு மன்றத்தில் நடைபெற்ற செய்தி யாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், “வாக்குகள் திருடப்படு வதாக நாங்கள் தொடர்ந்து கூறி வரு கிறோம். வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான வெளிப்படை யான சான்றுகள் எங்களிடம் இருக் கின்றன. இதனை நான் சாதாரணமாகச் சொல்லவில்லை. 100% ஆதாரத்துடன் நான் இதைச் சொல்கிறேன். அந்த ஆதாரத்தை வெளியிட்டவுடன் தேர்தல் ஆணையம், பாஜகவுக்கு ஆதர வாக வாக்குகளைத் திருடும் வேலையை செய்வது இந்த நாட்டு மக்கள் அனை வருக்கும் தெரியவரும். மத்தியப் பிர தேச தேர்தல், மக்களவைத் தேர்தல் களில் சந்தேகம் இருந்தது, மகாராஷ்டிரா தேர்தல்களின்போது சந்தேகம் மேலும் அதிகரித்தது. நாங்கள் 6 மாதங்கள் தனிப்பட்ட முறையில் விசாரணையை நடத்தினோம். அதில் எங்களுக்கு ஒரு அணுகுண்டு கிடைத்தது. இந்த அணு குண்டு வெடிக்கும்போது தேர்தல் ஆணையம் காணாமல் போய்விடும். தேர்தல் ஆணையத்தில் உயர் அதிகாரி கள் முதல் கீழ் நிலையில் உள்ளவர்கள் வரை, யார் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டாலும் அவர்களை நாங்கள் விடமாட்டோம். இது தேசத்துரோகம் சார்ந்த விஷயம் ஆகும்” என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.