india

img

பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தில் பல நூறுகோடி ரூபாய் ஊழல்.. டிஎச்எப்எல் நிறுவனம் மீது சிபிஐ குற்றச்சாட்டு பதிவு.....

புதுதில்லி:
மத்திய அரசின் ‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா’ (Pradhan Mantri Awas Yojana) எனப்படும் அனைவருக்கும் வீடு கட்டித் தரும் திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்’ 2015 அக்டோபரில் தொடங்கப்பட்டது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) வீடு கட்டித் தருவது இத்திட்டத் தின் நோக்கம். இந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் வீட்டுக் கடன்களுக்கு வட்டி மானியமும் உண்டு. வீட்டுக் கடன் வழங்கிய நிறுவனங்கள், அதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்து மத்திய அரசிடமிருந்து வட்டி மானியத்தை பெற்றுக் கொள்வார்கள்.

இதன்படி டிஎச்எப்எல் (Dewan Housing Finance Corporation Ltd-DHFL)நிறுவனம் டிசம்பர் 2018-ஆம்ஆண்டு 88 ஆயிரத்து 651 வீட்டுக் கடன்களை வழங்கியதற்கான ஆவணத்தை தாக்கல் செய்து ரூ. 539கோடியே 40 லட்சத்தை வட்டி மானியமாக மத்திய அரசிடம் பெற்றுள்ளது. இன்னும் ஆயிரத்து 347 கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து தனக்கு வரவேண்டியுள்ளது என்று டிஎச்எப்எல் நிறுவனம் கணக்கு காட்டியுள்ளது.இந்நிலையில், டிஎச்எப்எல் நிறுவனம் வழங்கிய வீட்டுக்கடன்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தணிக்கையில், அந்த நிறுவனம் பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் பெயரில்மிகப்பெரிய மோசடியை அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த வங்கியின் புரோமோட்டர் களான கபில் வாத்வான் மற்றும்தீரஜ் வாத்வான் ஆகிய இருவரும்ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, 2.6லட்சம் மோசடி வீட்டுக் கடன் கணக்குகளை உருவாக்கியுள்ளனர். இவை 2007 முதலான கணக்குகள் என்றாலும், 2016-க்குப் பிறகு, ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ், ஆயிரத்து 880 கோடி ரூபாய் வட்டிச் சலுகையை மத்திய அரசிடம் கேட்டு, அதில் முதற்கட்டமாக ரூ. 539 கோடியே 40 லட்சத்தை டிஎச்எப்எல் நிறுவனம் மூலமாக பெற்றுள்ளனர்.இதுதொடர்பாக விசாரித்து உண்மைகளைக் கண்டறிந்த சிபிஐஅதிகாரிகள் தற்போது கபில் வாத் வான் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகியஇருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.