நாங்கள் பாஜகவை விட்டு வெளியேறினோம். பாஜக என்பது பால்தாக்கரேயின் எண்ணங்கள் அல்ல. சிவசேனா 25 முதல் 30 ஆண்டுகளாக பாஜகவுடன் தான் இருந்தது. பாஜகவுடன் இணைந்து இருந்தாலும் ஒருநாளும் நாங்கள் அவர்களை போல மாறவில்லை.
கடந்த 20 ஆண்டுகளில் ஜார்க்கண்ட் மாநிலத்தை எலுமிச்சை பழம் போல் பிழிந்தது பாஜக. கனிம வளங்கள் நிறைந்த ஜார்க்கண்ட் இன்னும் ஏழ்மையான மாநிலமாகவே உள்ளது. இனிமேலும் பாஜகவை ஜார்க்கண்டிற்குள் நுழையவிட்டால் நிலைமை மோசமாகும்.
உத்தரப்பிரதேசத்தில் சாக்கடையாக பாயும் 247 வாய்க்கால்கள் கங்கை நதியை மாசுபடுத்துகின்றன. கங்கை நீர் குளிப்பதற்கு கூட தகுதியற்றது என அரசு அதிகாரிகளே கூறுகின்றனர். கங்கையை தூய்மைப்படுத்துகிறோம் என்ற பெயரில் பாஜக அரசு ஊழல் செய்து வருகிறது. இது வெட்கக்கேடானது.
ஒன்றிய பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங் தனது துறை மூலம் பீகாருக்கு ஏதாவது செய்திருக்கிறாரா? எத்தனை ஜவுளிப் பூங்காக்களை அவரால் அமைக்க முடிந்தது? எதுவுமே செய்யாமல் நாள்தோறும் எதையாவது உளறிக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்.