districts

img

காலமுறை ஊதியம் கேட்டு சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்!

தருமபுரி, நவ.12- காலமுறை ஊதியம் வழங்க வேண் டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்கத்தினர் செவ்வாயன்று உண்ணாவிரத இயக்கத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு, சத்துணவு ஊழியர்களை முழு  நேர அரசு ஊழியராக்கி, காலமுறை ஊதியம்  வழங்க வேண்டும். 63 ஆயிரம் காலிப்பணி யிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப  வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்க ளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயி ரம், பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும். சத் துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். கருணை அடிப் படையில் தகுதியுள்ள ஆண் வாரிசுகளுக்கும் பணி வழங்க வேண்டும். ஓய்வுபெறும் ஊழியர்க ளுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வு கால  பணப்பலன்களை வழங்க வேண்டும். ஊழியர்க ளுக்கு ஆண்டுதோறும் எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் கலந்தாய்வு மூலம் பணி யிட மாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்கத்தினர் செவ்வாயன்று உண் ணாவிரத இயக்கத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த இயக்கத்திற்கு, சத்து ணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே. தேவகி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் எம்.சுருளிநாதன் துவக்க வுரையாற்றினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஜே.அனுசுயா, பொருளா ளர் எம்.ராமன், மாவட்ட நிர்வாகிகள் ஜி.வளர் மதி, கே.சங்கீதா, எம்.ஜெயலட்சுமி, ஆர்.ஜெயா,  டி.மஞ்சுளா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், அரசு ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை, ஜாக்டோ  - ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி, அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலா ளர் எம்.பெருமாள், சத்துணவு அங்கன்வாடி ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாவட்ட அமைப் பாளர்கள் சி.காவேரி, சி.அங்கம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் பெ.மகேஸ்வரி நிறை வுரையாற்றினார்.  சேலம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற  உண்ணாவிரத இயக்கத்திற்கு, சத்துணவு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் கே.கே.காவேரி தலைமை வகித்தார். அனைத்துத்துறை ஓய்வு பெற்றோர் சங்க மாவட்டச் செயலாளர் சி.ராஜ் குமார் துவக்கவுரையாற்றினார். சத்துணவு ஊழி யர் சங்க மாநிலச் செயலாளார் வி.சுப்பிரமணி யன், மாவட்ட நிர்வாகி ஆர்.சுப்பிரமணியம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் சுரேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இதில் 100க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். கோவை கோவை, சிவானந்தா காலனியில் சத்துணவு  ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இப்போராட்டத்திற்கு, மாவட் டத் தலைவர் ஏ.பானுலதா தலைமை வகித்தார். இதில், இச்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப் பினர் ஏ.அம்சவேணி, அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் பி.செந்தில் குமார், தமிழ்நாடு சத் துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. லதா, மாவட்டப் பொருளாளர் பி.சுதா உள்ளிட்ட  திரளானோர் பங்கேற்றனர்.