கோவை, நவ.12- மருத்துவமனைகளில் ஆய்வு செய் கையில், மருத்துவர்கள் வராத நிலை இருந்தால் அவர்களை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கோவை யில் செய்தியாளர்களிடம் தெரிவித் தார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.13 கோடி மதிப் பில் 2 ஆவது எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவி யினை மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பி ரமணியம் செவ்வாயன்று துவக்கி வைத் தார். இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநக ராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத் துவமனை முதல்வர் நிர்மலா உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர், கோவை அரசு மருத்துவமனையில் ரூ.13 கோடி செலவில் 2 ஆவது எம்.ஆர்.ஐ.ஸ்கேன் திறக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான எம்.ஆர்.ஐ.ஸ்கேன் தேவை இருப்ப தால், ஜப்பான் நிதி ஆதார உதவியுடன் அதிநவின இந்த எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி அமைக்கப்பட்டுள்ளது. வழக்க மாக ஒரு ஸ்கேன் எடுக்க 40 நிமிடங் கள் ஆகும். ஆனால், தற்போது உள்ள புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் 20 நிமி டத்திற்குள் எடுத்துக் கொள்ள முடி யும். இதில், நரம்பியல், இருதவியல், புற்றுநோய் பாதிப்புகளை துல்லிய மாக எடுக்க முடியும். கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் இந்த அரசால் செய்யப்பட்டுள்ளது. புற நோயாளிகளின் எண்ணிக்கை 2021 இல் 3000 வரை இருந்த நிலையில், தற் போது 4 ஆயிரத்துக்கும் மேல் அதி கரித்து உள்ளது. இது அரசு மருத்து வவமனையில் சிகிச்சை பெற விரும் பும் நபர்களின் எண்ணிக்கை அதிக ரித்துள்ளது. படுக்கை விரிப்பு, தலை யனை போன்றவற்றை சலவை செய்ய ரூ.2.20 கோடி செலவில் பணிகள் நடை பெற்று கொண்டு இருக்கின்றது. பழைய கட்டிடத்திற்கும் புதிய கட்டிடத்திற்கும் கனெக்டிங் கேரிடார் ஒன்றும் அமைக் கப்பட இருக்கின்றது. மேலும், கோவை யில் 72 நலவாழ்வு மையங்கள் அமைக் கப்படும் என அறிவிக்கப்பட்டு, முதற் கட்டமாக அண்மையில் தமிழக முதல் வர் 500 மருத்துவமனைகளை திறந்துவைத்தார். இதில், கோவை மாநகராட்சி பகுதியில் 45 இடங்களில் நகர்புறநலவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றது. 45 மருத்துமனைகளிலும் ஒவ்வொரு மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய் வாளர், உதவியாளர் என 4 பணியி டங்கள் நியமிக்கபட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் மருத்துவத் துறை கடமைகளாக காலை 8-12 மணி வரையும், மாலை 4-8 மணிவரையும் செயல் பட வேண்டும் என அறிவுறுத் தபட்டு இருந்தது. இந்நிலையில், திங்க ளன்று மாலை 4 மையங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அதில், இரண்டு மருத்துவமனைகளில் மருத்து வர்கள் இருந்தனர். இரண்டு இடங்க ளில் மருத்துவர்கள் இல்லாமல் இருந் தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை களில் காலை மாலை ஆய்வு செய்து கண்காணிக்கவும், வராமல் இருக்கும் மருத்துவர்களை விடுவிக்கவும் அதி காரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் பணி ஒப்பந்தப் பணிகள் என்பதால் வராதவர்களை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, உடனடியாக தகுதியான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தபட்டுள்ளது. மேலும், மருத்துவர்கள் மீது பணி சுமைகள் இல்லை. ஊடகங்கள் திட்ட மிட்டு பணிச்சுமையை ஏற்றுகின்றீர்கள். யாருக்கும் எந்த சுமையும் இல்லை 2000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் முறைபடுத்தப்பட இருக்கின்றனர். தனி யார் மருத்துவமனையில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது புகார் இருந்தால் அது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். கோவை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்திகள் அனைத்தும் செயல் பாட்டில் இருக்கின்றது, என்றார்.