districts

img

சிபிஎம் வாழப்பாடி தாலுகாச் செயலாளராக பி.கந்தசாமி தேர்வு

சேலம், நவ.12- மார்க்சிஸ்ட் கட்சியின் வாழப்பாடி தாலுகாச் செயலா ளராக பி.கந்தசாமி தேர்வு செய் யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டம், வாழப்பாடி தாலுகா 8 ஆவது மாநாடு அயோத்தியாபட்டினம் பகுதியில் ஞாயிறன்று நடை பெற்றது. செங்கொடியை இ.சீரங்கன் ஏற்றி  வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன் துவக்கவுரையாற்றினார். தாலுகாச் செயலாளர் வி.தங்கவேலு அறிக் கையை முன்வைத்தார். மாவட்டக்குழு உறுப் பினர் ஆர்.குழந்தைவேல் வாழ்த்திப் பேசி னார். இதில், அயோத்தியாபட்டினம் பகுதி யில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண் டும். வாழப்பாடி பகுதியில் வாசனை திரவியம்  தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண் டும். மரவள்ளிக்கிழங்கிற்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். ஜவ்வரிசி தொழிற்சாலை அமைக்க வேண்டும். வாழப்பாடி தாலுகா வில் உள்ள பஞ்சமி நிலங்களை கண்டறிந்து, உரியவர்களிடம் வழங்க வேண்டும். தாலுகா அலுவலகத்தை வாழப்பாடி நக ரத்தில் அமைக்க வேண்டும். அயோத்தியாபட்டினம் ரயில்வே கேட் முதல்  ராமர் கோவில் வரை சாலையில் உள்ள ஆக்கி ரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் வாழப்பாடி  தாலுகாச் செயலாளராக பி.கந்தசாமி மற்றும்  9 தாலுகாக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய் யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.கணபதி நிறைவுரையாற்றினார்.