கன்னியாகுமரி,டிசம்பர்.26- தமிழ்நாட்டில் சுனாமி தாக்கி இன்றுடன் 20 ஆண்டுகள் ஆன நிலையில் இன்று சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நாகப்பட்டினம் உட்படப் பல கடலோரப் பகுதிகளில் ஆழிப்பேரலை ஏற்பட்டது.
இந்த துயர சம்பவத்தில் பச்சிளம் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தங்கள் உறவுகளை இழந்த மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் சுனாமி நினைவு தினத்தை கடைப்பிடித்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.