திருப்பூர், டிச.26 - கரூர் - கோவை தேசிய நெடுஞ் சாலை எண் 81 சாலை விரிவாக்க பணியில் ஊழல் நடைபெற்று தரம் இல்லாமல் பணிகள் செய்யப்பட்டு இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிஏபி விவ சாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றனர். இந்த நிலையில் தேசிய நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் வியா ழனன்று காங்கேயம் வெள்ளக் கோயில் இடையே அமைக்கப்பட்டு வரும் சாலை விரிவாக்கப் பணியை மூன்றாவது முறையாக நேரில் ஆய்வு செய்தனர். பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை கால்வாய் வீரணம்பாளையம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் ப.வேலுச்சாமி இது தொடர் பாக கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து புகார் தெரிவித்து வருகி றார். குறிப்பாக, கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளக் கோவிலுக்கும், காங்கேயத்திற்கும் இடைப்பட்ட பகுதியில், பொறியியல் தர நிர்ணயத்தை அலட்சியப்படுத்தி, தொழில்நுட்ப அறிவு இல்லாத சாமா னியர்கள் கூட குறைகளை கண்டறி யும் விதத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் மிக மோசமாக செய்யப் பட்டுள்ளன. எனவே தேசிய நெடுஞ்சாலைகள் துறை தலைமைப் பொறியாளர் நேரடி யாக கள ஆய்வு செய்து, சம்பந்தப் பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு தர வேண்டிய தொகையை நிறுத்தி வைக்க வேண்டும். தரமின்மை மற்றும் குளறுபடிகளை சரி செய்து விட்டு அதை உறுதிப்படுத்திய பிறகு தான் ஒப்பந்ததாரருக்கு தர வேண் டிய பணத்தை வழங்க வேண்டும். மேலும் பி.ஏ.பி திட்டத்தின் பல் வேறு கால்வாய்கள் இந்த சாலை யின் குறுக்காகச் செல்கின்றன. இவற் றின் மீது கட்டப்பட்டுள்ள பாலங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் பழைய கால்வாய் குழாய்கள் அகற்றப்பட்டு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை தண் ணீர் செல்லும் பாதையை அடைத்து பாசனத்திற்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்துவதாக உள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு பொதுப்ப ணித்துறை நீர்வள ஆதார அதிகாரிக ளிடம் கேட்டபோது, தேசிய நெடுஞ் சாலை துறையினர் இப்பிரச்சனை களை காது கொடுத்து கேட்ப தில்லை, எங்களுடன் ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்று கூறுகின்றனர். இதைப் பற்றி கடந்த ஆறு மாத கால மாக முறையிட்ட போதும், தேசிய நெடுஞ்சாலைத் துறை கோட்ட உத விப் பொறியாளர் கால்வாய்கள் மற்றும் பாலங்களை சீரமைத்து தருவதாக கூறினார். எனினும் இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே திருப்பூர் மாவட்ட ஆட்சிய ரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அவர் இப்பிரச்ச னையை பரிசீலித்து, நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகளை ஆய்வு செய்ய அனுப்பினார். அவர்களும் குறைபாடுகளை சரி செய்வதாக உறு தியளித்தனர். எனினும் அவர்களும் சரி செய்யவில்லை. குறிப்பாக சாலை விரிவாக்கத் திற்காக நிலம் கையகப்படுத்தியதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெற் றுள்ளன. மேலும் விரிவாக்கப்பட்ட சாலைப் பகுதிகளில் கிணறுகள் சாலையோரம் உள்ளன. பெரும் பாலான பாலங்கள் தரைமட்டத்திற்கு அமைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் நோக்கம் தோல்வியடைந்து உள் ளது. போதிய இடம் இருந்தும் மழை நீர் வடிகால் வசதி செய்யப்பட வில்லை. பி.ஏ.பி. கால்வாய்கள் இணைப்புப் பகுதி மிக ஆழமாக அமைக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் அங்கேயே தேங்கி விவசாயிகளுக்கு பாசனத்திற்கு செல்லாமல் பெரும் பிரச்சனை ஏற்படும். மேலும் கழிவுகளை கொட்டி சுகாதார சீர்கே டும் ஏற்படும். சாலைகளில் உரிய எச்சரிக்கை, அடையாளப் பலகை கள் வைக்கப்படவில்லை. இரவு நேர பயணத்திற்கு உரிய ஒளிரும் அடை யாளங்கள் ஒட்டப்படவில்லை. இது போன்ற ஏராளமான குளறுபடிகளை சாமானியர்களால் அறிய முடியும் போது, பொறியாளர்கள் இன்னும் கூடுதல் குறைபாடுகளை கண்டுபி டிக்க முடியும். எனவே கமிஷன் பெறு வதற்காக இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழு கிறது. பிரச்சனையில் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பிஏபி வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் நிலை பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள் வதாக வேலுச்சாமி கூறியுள்ளார். இந்த நிலையில் வியாழனன்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகா ரிகள் நேரில் ஆய்வு செய்தனர். பிஏபி பாசன விவசாயிகள் உடன் இருந்த னர். காங்கேயம் கோவை சாலையில் காடையூர் பகுதியில் சாலையோ ரம் இருக்கும் பள்ளத்தை சீரமைத்து பாலம் அமைத்து தருவதாகவும், காங்கேயம் வெள்ளக்கோயில் இடையே இருக்கும் இரட்டைக் குழாய் பகுதியில் புதிய பாலம் கட்டி தருவதாகவும் அதிகாரிகள் உறுதி யளித்தனர். முழுமையாக கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலை விரி வாக்கப் பணியை தரமாக செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலி யுறுத்தி உள்ளனர். மேலும் தேசிய நெடுஞ்சாலை துறையின் தென்னக தலைமை பொறி யாளர் நேரில் வந்து இங்கு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விவசாயி கள் வலியுறுத்தியதாக வேலுச்சாமி தெரிவித்துள்ளார். அனைத்து குறைபாடுகளையும் சீரமைத்த பிறகு அவரை வரவழைப் பதாக நெடுஞ்சாலை துறை அதிகாரி கள் கூறியுள்ளனர். குறிப்பாக கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலை வாக னப் போக்குவரத்து மிக அதிகமாக உள்ள சாலை ஆகும். அதிலும் குறிப் பாக காங்கேயம் வெள்ளகோவில் இடையே அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே விதிமு றைகளின் படி இந்த சாலையை அமைப்பது உயிரிழப்பு விபத்து களை தவிர்ப்பதற்கும், பாதுகாப் பான பயணத்திற்கும் முக்கியமா கும். எனவே விவசாயிகளின் கோரிக்கை அவர்களுக்கு மட்டு மின்றி அனைத்துப் பகுதி மக்களுக் கும் பொதுவானது என்று, காங்கே யம் வட்டார பொதுமக்கள் அவர்க ளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.