உடுமலை, டிச.26- பட்டுக்கூடுகளுக்கு பணம் தராமல் தனி யார் நுாற்பாலை இழுத்தடிப்பதாக உடுமலை அருகே உள்ள மைவாடி பட்டு வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில், பட்டுக்கூடு உற் பத்தி விவசாயிகள் நலச்சங்க மாநிலத்தலை வர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் செல்வ ராஜ், தலைமையில் விவசாயிகள் போராட் டம் நடத்தினர். உடுமலை, அமராவதி நகரில் செயல் பட்டு வரும் சில்வர் மைன்ஸ் என்ற தனியார் பட்டு நுாற்பாலை நிறுவனம், விவசாயிக ளிடம் பட்டுக்கூடு கொள்முதல் செய்து வருகி றது. இந்நிறுவனம், கோவை, திருப்பூர், திண் டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நுாற் றுக்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் கொள்மு தல் செய்த பட்டுக்கூடுகளுக்கு, கடந்த 9 மாத மாக தொகை வழங்கவில்லை. மூன்று மாவட்ட விவசாயிகளுக்கு, ரூ.30 லட்சம் வரை, பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வருவதோடு, ஏமாற்றி வருகிறது. மேலும், இந்த சில்வர் மைன்ஸ் நிறுவனம் அரசு மொபைல் அங்காடியாகவும் செயல்பட்டது. இதற்கு, கையாளும் கட்டணம் என்ற பெய ரில் விவசாயிகளிடமிருந்து, 0.75 சதவீதம், லெவி என வசூல் செய்து, அதனை அரசுக்கு செலுத்தாமல், கடந்த, 5 ஆண்டுகளில், ஏறத் தாழ, 10 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள் ளது. இது குறித்து, பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத் தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இது குறித்து விசாரணை நடத்தி, பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகளை ஏமாற் றியுள்ள அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, விவசாயிகளுக்குரிய தொகையை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை பட்டுக்கூடு உற் பத்தி விவசாயிகள் நலச்சங்கத்தினர் முற்று கையிட்டனர். இதையடுத்து, மடத்துக்குளம் வட்டாட்சி யர் பானுமதியுடன் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் வரும் ஜன.10 அன்று தொடர் புடைய நிறுவனம் மற்றும் பட்டு வளர்ச்சி அலு வலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாக முடிவு செய்யப்பட்டுள் ளது.