திருப்பூர், டிச. 26 - திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் கே.வி.ஆர்.நகர் என்.வேலுச்சாமியின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை கே.வி.ஆர்.நகர் கிளை முன்பு கடைப்பிடிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகரச் செயலாளர் த.ஜெயபால், கருவம்பாளை யம் தெற்கு கிளைச் செயலாளர் பி.கோபால், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜி ஈஸ்வரமூர்த்தி, பனியன் சங்க ஏரியா கமிட்டி தலைவர் ஆர்.சக்திவேல், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சிவராமன் மற்றும் வி.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.